Asianet News TamilAsianet News Tamil

மீன் சாப்பிடுவதால் உங்களுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன…

You have so much benefits that you eat fish ...
You have so much benefits that you eat fish ...
Author
First Published Aug 1, 2017, 1:12 PM IST


கடல் வகை உணவான மீன் சாப்பிட்டால் நன்மை பயக்கும் என்று தெரிந்திருப்பீர்கள். ஆனால், எதன் காரணமாக உங்கள் உடலுக்கு நன்மை கிடைக்கிறது என்பதை அறிந்துகொண்டு சாப்பிடுங்கள்.

மட்டன் சிக்கன் உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது.

மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பேட்டி ஆசிட்களான ஒமேகா 3 உள்ளது, இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகும்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரியவந்துள்ளது.

குறிப்பாக டூனா, சால்மோன், சார்டினஸ், ஸ்வார்ட்பிஷ், மேக்கரில் போன்ற மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கடந்த 3 வருடங்களாக 2 அல்லது மூன்று துண்டு மீன்களை இரவில் சாப்பிடுமாறு பரிந்துரைக்கப்பட்டது.

இதன் முடிவில் அவர்கள் இதய நோயில் இருந்து குணமாகியுள்ளது என தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் தொற்றுநோய் தாக்கம், சிறுநீரக புற்றுநோய், பெருங்கடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.

குறிப்பாக மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒருமுறையாவது உணவுடன் மீனை சேர்த்துக்கொண்டால், மூளை வளர்ச்சி குறைபாடு 10 சதவிகிதம் முதல் 13 சதவிகிதம் வரை குறையும்.

அதுமட்டுமின்றி மீனில் சோடியம், பொட்டாசியம், புரோட்டீன், வைட்டமின் ஏ, சி, டி, பி-6, பி-12, கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

மேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மீனை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்ளவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios