You can stop the hair from eating these fruits completely ...
ஆரஞ்சு (Orange)
சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான இனிப்பு சுவையுடைய ஆரஞ்சு பழங்கள் கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதற்கு ஆரஞ்சு பழத்தின் சாற்றினை தலையில் ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், நல்ல பலனைப் பெறலாம்.
பப்பளிமாசு (Grape fruit)
வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்களில் பப்பளிமாசு பழத்தின் சாற்றினை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.
எலுமிச்சை (Lemon)
எலுமிச்சையில் நிறைய கூந்தலுக்கான நன்மைகள் உள்ளன. அதிலும் எலுமிச்சை சாற்றினை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, பொடுகுத் தொல்லை, வறட்சியான ஸ்கால்ப் போன்றவை தடைப்படும்.
செர்ரி (Cherry)
செர்ரிப் பழங்களிலும், கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பளோஃப்ளேவோனாய்டுகள் இருக்கின்றன.
வாழைப்பழம் (Banana)
வாழைப்பழத்தை மசித்து, அதனை கூந்தலில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் பட்டுப் போன்றும் பொலிவோடும் இருக்கும்.
ப்ளம்ஸ் (Plums)
நல்ல ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? அப்படியெனில் கூந்தலைப் பராமரிக்க ப்ளம்ஸ் பயன்படுத்த வேண்டும். அதிலும், ப்ளம்ஸ் வைத்து, ஹேர் மாஸ்க் போட்டால், கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.
கொய்யாப்பழம் (Guava)
கொய்யாப்பழத்தில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. எனவே கொய்யாப்பழத்தை அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.
நெல்லிக்காய் (Amla)
நெல்லிக்காயிலும் கூந்தல் வளர்ச்சிக்கான பொருள் நிறைந்துள்ளது. மேலும் தலையில் பொடுகு உள்ளவர்கள், நெல்லிக்காய் சாற்றுடன், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் பாடும் படியாக தேய்த்து ஊற வைத்து குளித்தால், பொடுகுத் தொல்லையோடு, கூந்தல் உதிர்தல் பிரச்சனையும் நீங்கும்.
