Women who have asthma are more careful during pregnancy. Why?

ஆஸ்துமா பாதிப்புள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களும் கர்ப்ப காலத்தில் சிறப்பு கவனத்தோடு கவனிக்கப்பட வேண்டியவர்கள்.

ஆஸ்துமா உள்ளவர்கள் பொதுவாக தங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானது என்று எதிலெல்லாம் மிகுந்த கவனத்துடன் இருப்பார்களோ அதிலெல்லாம் கர்ப்ப காலத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.

திருவிழா போன்ற நெரிசல் மிகுந்த இடங்களிலும், தூசி நிறைந்த இடங்களிலும் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

அதையும் மீறி ஏதேனும் பாதித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையுடன் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக டி.பி. எனப்படும் காசநோய். இந்த நோயை வந்த வேகத்திலேயே விரட்டும் அளவுக்கு மருத்துவம் இப்போது முன்னேறிவிட்டது. ஆனாலும் டி.பி-யால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதற்கான மருந்து சாப்பிடும் சமயத்தில் கருத்தரிக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் டி.பிக்கான மருந்துகளின் வீரியம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும்.