Why we get hiccup often
நமக்கு அடிக்கடி விக்கல் ஏற்பட்டால், யாரோ நம்மை அதிகமாக நினைக்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால், உண்மையில் நமக்கு எதனால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது? அதற்கு என்ன காரணம்? என்று இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
விக்கல் ஏற்படுவதற்கு என்ன காரணம்?
நமது உடம்பில் உள்ள நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றானது மூச்சுப் பாதையின் மிகக் குறுகிய இடைவெளியில் செல்கிறது. இதனால் ஒருவித விநோத ஒலி உண்டாகும். அந்த ஒலியைத் தான் நாம் விக்கல் என்று கூறுகின்றோம்.
இது போன்று விக்கல் எற்படுவது இயல்பு. ஆனால் ஒரு சிலருக்கு விக்கலானது அடிக்கடி ஏற்படும். அப்படி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். ஏனெனில் அதற்கு சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மூளைக் காய்ச்சல், நீரிழிவு நோய், குடல் அடைப்பு போன்ற நோய்களின் அறிகுறியாகவும் கூட விக்கல் ஏற்படும்.
மேலும் இதை தவிர்த்து, அதிக காரம் உள்ள உணவுகள் சாப்பிடுதல், அளவுக்கு மீறி அல்லது அவசரமாக உணவு சாப்பிடுதல், தேவையான அளவிற்குத் தண்ணீர் குடிக்காமல் இருத்தல் இது போன்ற காரணங்களினாலும் விக்கல் ஏற்படுவதுண்டு.
விக்கல் வருவதால் ஏற்படும் பிரச்சனை
விக்கல் தொடர்ந்து நமக்கு ஏற்படும் போது, கண் வறண்டு போதல் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
விக்கலை தடுக்கு வழிகள்
** தொடர்ச்சியான விக்கல் பிரச்சனை உள்ளவர்கள், எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளான காய்கறி மற்றும் பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
** தினமும் 4 முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியாமாகும். மேலும் வறட்சியான, சூடான உணவுகளை தவிர்த்து விட்டமின்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
