Ice Cream: ஐஸ்கிரீம் ஏன் நம் உடலுக்கு நல்லதல்ல? எச்சரிக்கை பதிவு!
ஐஸ்கிரீம் சுவைதான் வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் தன் பக்கம் இழுக்கிறது. இருப்பினும் ஐஸ்கிரீம் நம் உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்றால் நம்மில் பலருக்கு உண்மைநிலை தெரியாது. ஏனெனில் நாம் யாரும் இது குறித்து சிந்திப்பதே இல்லை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் ஓர் உணவு ஐஸ்கிரீம். பூங்கா, கடற்கரை, தியேட்டர் மற்றும் விசேஷங்கள் என நாம் எங்கு சென்றாலும் சுவையான ஐஸ்கிரீமை ரசித்து ருசித்து சாப்பிடும் பழக்கம் அனைவரிடத்திலும் இருக்கிறது. இதனுடைய சுவையை தான் வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் தன் பக்கம் இழுக்கிறது. இருப்பினும் ஐஸ்கிரீம் நம் உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்றால் நம்மில் பலருக்கு உண்மைநிலை தெரியாது. ஏனெனில் நாம் யாரும் இது குறித்து சிந்திப்பதே இல்லை.
ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம் சாப்பிட்ட அன்றைய தினத்தின் இரவிலேயே சிலர் சளி மற்றும் இருமல் போன்ற தொந்தரவுகளால் அவதிப்படுவார்கள். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு சளி மற்றும் இருமல் நம்மைப் பாடாய்ப்படுத்தி விடும். அதிலும் குழந்தைகள் எனில், நிச்சயம் சளி பிடிப்பது உறுதி.
மருத்துவம் தொடர்பான விளக்கம்
ஐஸ்கிரீம் அல்லது ஏதேனும் கூலாக சாப்பிட்டால், உடனடியாக சூடான தண்ணீர் குடித்தால் சளித் தொல்லை இருக்காது என கூறுவார்கள். இது முற்றிலும் உண்மை தானா? எனக் கேட்டால் அதுவும் புரியாத புதிராகவே உள்ளது. ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு சூடான தண்ணீர் குடித்தால், சளிப் பிடிக்காது என்பதற்கு மருத்துவ ரீதியிலான எந்தவித ஆதாரங்களும் இல்லை.
வாய் கொப்பளிப்பது நல்லது
வைரஸ் கிருமிகள் இயல்பாகவே நம் வாயில் இருக்கும். இவை, உமிழ்நீரில் கலந்து செயலிழந்து போகும். குளிர்ச்சியான உணவுப் பொருட்களை நாம் சாப்பிடும் நேரத்தில், வைரஸ் கிருமிகள் தூண்டப்பட்டு சளிப் பிடிக்கத் தொடங்கும். அதாவது, தொண்டையின் டான்சில்களில் நோய் கிருமிகள் படிந்து விடும். கிருமிகளின் வீரியம் அதிகரிக்கும் சமயத்தில், உடல்நலக் கோளாறுகள் உண்டாகிறது. ஆகவே, சாப்பிட்டு முடித்தவுடனே எப்பொழுதும் வாய் கொப்பளிப்பது தான் மிகவும் நல்லது. இதன் காரணமாக தொண்டையில் இருக்கும் கிருமிகள் அழிந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் சூடான தண்ணீரில் உப்பு கலந்து, வாய் கொப்பளிப்பது நல்ல பலனைத் தரும்.
Toenail: கால் ஆணியால் அவதிப்படுபவரா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!
ஐஸ்கிரீம் ஏன் நல்லதல்ல?
ஐஸ்கிரீமை அனைவரும் விரும்பி சாப்பிட காரணமே அதன் சுவை தான். இதனுடைய சுவைக்காக ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் சர்க்கரை, பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. இதிலுள்ள கொழுப்பு பொருட்களின் விளைவாக, நம் உடலிலும் கொழுப்புகள் அதிகரித்து விடும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக இரத்த நாளங்கள் சுருங்கி விடுவதோடு, சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, பல நோய்கள் நம்மைத் தாக்கி விடும். குறிப்பாக இரத்த அழுத்தம், மாரடைப்பு, தசைகளின் வலிமை குறைவு மற்றும் நீரிழிவு நோய் போன்ற பல நோய்களுக்கு வழிவகுத்து விடும் என்பதால் ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது அல்ல என்பது தான் உண்மை.