Oil: உடலுக்கு நன்மை செய்யும் எண்ணெய் வகைகள் எவை! சில முக்கிய தகவல்கள்!
நாம் உண்ணும் உணவு வகைகளில் எண்ணெய் உணவு மிக முக்கிய பங்காற்றுகிறது. உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்தும் பல வகையான எண்ணெய்கள் பிரித்தெடுக்கப்பட்டும் உண்ணப்படுகிறது. நம்முடைய சருமத்திற்கும், உடல் இயக்கத்திற்கும் எண்ணெய் வஸ்துக்கள் பல்வேறு நண்மைகளை அள்ளிக் கொடுக்கிறது.
நாம் உண்ணும் உணவு வகைகளில் எண்ணெய் உணவு மிக முக்கிய பங்காற்றுகிறது. உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்தும் பல வகையான எண்ணெய்கள் பிரித்தெடுக்கப்பட்டும் உண்ணப்படுகிறது. நம்முடைய சருமத்திற்கும், உடல் இயக்கத்திற்கும் எண்ணெய் வஸ்துக்கள் பல்வேறு நண்மைகளை அள்ளிக் கொடுக்கிறது.
நன்மை அளிக்கும் எண்ணெய் வகைகள்
எள் எண்ணெய்
எள்ளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்ற நெய்யை எள் எண்ணெய், அதாவது நல்லெண்ணெய் என்று அழைக்கிறோம். இந்த எள் எண்ணெய் நம் உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பதோடு, இதனை தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம் என கூறப்படுகிறது.
தேங்காய் எண்ணெய்
அனைவரும் தினசரி பயன்படுத்தும் எண்ணெய் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். உடலுக்கு உள்ளே மற்றும் வெளியே இருக்கும் புண்களை ஆற்றும் சக்தியை தேங்காய் எண்ணெய் பெற்றுள்ளது. இதில் கொழுப்பு அதிகளவில் இருப்பதால், கொழுப்பை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், தேங்காய் எண்ணெயை தவிர்த்து விடுவது நலம். வாய்ப்புண், அல்சர், கர்ப்பப்பைபுண் மற்றும் புற்றுநோய் உள்ள நபர்கள் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளலாம்.
கடலை எண்ணெய்
அதிகளவிலான கொழுப்பை கொண்டிருப்பது கடலை எண்ணெய். இதனை அளவுக்கும் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம். இரத்த அழுத்த நோய், இருதய நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களும் இதனை தவிர்த்து விட வேண்டும்.
Late Dinner: இரவில் உணவை தாமதாமாக சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்!
விளக்கெண்ணெய்
உடல் வறட்சியின் காரணமாக சிலரது தோல் வறண்டும், பொலிவிழந்தும் காணப்படும். அதனால் இதற்குத் தீர்வாக விளக்கெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அதோடு ஆசன வாய் கடுப்பு மற்றும் வயிற்றில் இரைப்பு போன்ற நோய்கள் இருப்பவர்கள் விளக்கெண்ணெயை பயன்படுத்தலாம். பெண்களுக்கு முலைக்காம்படு புண் மற்றும் முலைவெடிப்பு இருப்பவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தினால் குணமாகும் என கூறப்படுகிறது. உடல் சூடு அல்லது தூசுக்களால் கண்கள் சிவந்து காணப்பட்டால், தாய்ப்பாலுடன் விளக்கெண்ணெய் கலந்து கண்களில் விட்டால் சிவப்பு நீங்கி விடும்.
வேப்பெண்ணெய்
மிகச் சிறந்த கிருமி நாசினியாக வேப்பெண்ணெய் பயன்படுகிறது. அதோடு, இந்த எண்ணெய் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு, எந்தவித ஆபத்தையும் விளைவிக்காது. இது அதிகளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலுக்கு கொடுக்க வல்லது. இதனை தினந்தோறும் 5 மில்லிகிராம் வரை உண்ணலாம் என கூறப்படுகிறது.