Asianet News TamilAsianet News Tamil

நீங்கள் எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள்? இந்த பரிசோதனை மூலம் நீங்களே தெரிந்து கொள்ளலாம்...

What kind of disease are you suffering? With this experiment you can find out ...
What kind of disease are you suffering? With this experiment you can find out ...
Author
First Published Mar 7, 2018, 2:00 PM IST


நமக்கு எந்த நோயினால் அதிக தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று நமது உடம்பில் உள்ள ரத்தம் மற்றும் சிறுநீரின் பரிசோதனைகளை வைத்து தெரிந்து கொள்வோம்.

 

அதேபோல நமது உடம்பில் இருந்து வெளியேற்றப்படும் சிறுநீரை வைத்து, நமக்கு எந்த நோயின் தொற்றுக்கள் உள்ளது என்பதை வீட்டில் சிறுநீர் பரிசோதனையை செய்து நமக்கு நாமே தெரிந்து கொள்ளலாம்.

 

சிறுநீர் பரிசோதனை செய்வது எப்படி?

 

நம்முடைய காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டு, பின் அதை நன்றாக உற்றுக் கவனிக்க வேண்டும்.

 

அதில், எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது என்று அர்த்தம்.

 

மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் என்று அர்த்தம்,

 

முத்து போல நின்றால் உங்களுக்கு கபநோய் என்று அர்த்தம்,

 

எண்ணெய்த் துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்,

 

எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்,

 

எண்ணெய்த் துளி சிதறினாலோ அல்லது அமிழ்ந்து விட்டாலோ நோயைக் குணப்படுத்தவே முடியாது என்று அர்த்தம்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios