உங்களுக்கு நரம்பியல் பிரச்சனை அல்லது பலவீனமாக இருந்தால் கால் நரம்பு சுண்டி இழுக்கும். இந்த பிரச்சனையை நொடியில் குணமாக சில வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Relieving Sciatica Nerve Pain Effective Methods : இன்றைய காலகட்டத்தில் பல பேருக்கு நடக்க முடியாதபடி கால் வலி, மூட்டு வலி ஏற்படுவது போல கால் நரம்பும் சுண்டி இழுப்பது பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகி விட்டது. இந்த பிரச்சினைகள் பெண்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

இப்படி கால் நரம்பு சுண்டி இழுப்பதை sciatica nerve pain என்று சொல்லப்படுகிறது. sciatica என்றால் உடலின் பின் பகுதியில் இருந்து கணுக்கால் வரைக்கும் இருக்கும் ஒரு முக்கியமான நரம்பு. இந்த நரம்பு தான் மூளையிலிருந்து கணுக்களுக்கு தேவையான அனைத்து முக்கியமான தகவல்களையும் கொண்டு செல்லும்.

நடப்பது, ஓடுதல், நடனமாடுதல் போன்ற கால்களைக் கொண்டு செய்யப்படும் அனைத்து வேலைகளுக்கும் இந்த நரம்பு தான் பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் நரம்பு பிரச்சனை அல்லது பலவீனமடைதல் போன்ற காரணங்களால் கால் நரம்பு சுண்டி இழுக்கிறது. இந்த பிரச்சனையை நொடியில் குணமாக சில வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இஞ்சி எண்ணெய் (Ginger oil):

எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் இஞ்சி எண்ணெய் கிடைக்கும். இதில் அழற்சி எதிர்ப்பு (anti inflammatory) பண்புகள் உள்ளன. இது கடுமையான வலியைக் கூட நொடியில் குணமாக்கிவிடும். எனவே இந்த எண்ணெயின் 5 துளிகளை கால் நரம்பு சுண்டி இழுக்கும் பகுதியில் தடவி லேசாக மசாஜ் செய்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

சூடு தண்ணீர் மசாஜ் (Hot water massage):

இதற்கு மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் ஒரு காட்டன் துண்டை பயன்படுத்தி கால் நரம்பு சுண்டி இழுக்கும் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் நரம்புகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கால் நரம்பு சுண்டி இழுப்பது விரைவில் சரியாகும்.

எப்சம் உப்பு (Epsom salt):

எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் இந்த உப்பு கிடைக்கும். எப்சம் உப்பில் மெக்னீசியம் உள்ளதால், இது வலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். இப்போது மிதமான சூட்டில் இருக்கும் நீரில் 2 ஸ்பூன் எப்சம் உப்பு சேர்க்கவும். பிறகு அந்த தண்ணீரை தொடையிலிருந்து பாதம் வரை ஊற்ற வேண்டும். முறையை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் வலியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு பால் (Garlic milk):

கால் நரம்பு இழுப்பு பிரச்சினைக்கு பூண்டு பால் சிறந்த தீர்வாக இருக்கும். பூண்டு பாலில் இயற்கையாகவே அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது நரம்பில் இருக்கும் ரத்தக் கட்டு பிரச்சினையை போக்கி, நரம்புகளுக்கு வலுவை கொடுக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை சீராக இயங்க உதவும்.

வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி உணவுகள்:

மீன், முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவுகளில் வைட்டமின் பி12 அதிகமாகவே உள்ளன. இது தவிர சோயா பால், பால் தயிர்ச்சி போன்ற பால் சார்ந்த பொருட்களிலும் வைட்டமின் பி12 நிறைந்து காணப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி நாம் பெறலாம். இதற்கு தினமும் காலை சுமார் அரை மணி நேரம் சூரிய ஒளியில் இருப்பது நல்லது.