உடல் எடையை வேகமாக குறைக்க சுய விதைகளை எப்போது, எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Ways to Eat Chia Seeds for Weight Loss : உடல் எடையை விரைவில் குறைக்க உதவும் சூப்பர் ஃபுட்களில் ஒன்றுதான் சியா விதைகள் (chia seeds). சியா விதைகளில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்களும் சியா விதைகளில் உள்ளன. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், உடல் எடையை குறைப்பதில் மிகவும் சிறப்பாக உதவி செய்யும். எனவே, எடை இழப்புக்கு சியா விதைகளை எப்போது, எப்படி, எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எடை இழப்புக்கு சியா விதைகள் எவ்வாறு உதவுகிறது?

சியா விதைகளில் அதிகளவு நார்ச்சத்து உள்ளன. இவை எடையை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. அதாவது, இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து உடலின் இயக்கங்களை சீராக்கி கொழுப்பை கரைக்க உதவும். மேலும் சியா விதைகளில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகப்படியான பசியை கட்டுப்படுத்தி, உடலில் மெட்டாபாலிசத்தை அதிகரிக்க செய்யும். அது மட்டுமின்றி உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி, ஜீரண சக்தியை மேம்படுத்தும். இதனால் எடையை வேகமாக குறைக்கலாம். இது தவிர, இதில் இருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும்.

எடையை குறைக்க சில விதைகளை எப்படி சாப்பிடணும்?

- 2 ஸ்பூன் சியா விதைகளை இரவு முழுவதும் தண்ணீர் அல்லது பாலில் ஊற வைத்து பிறகு மறுநாள் காலை நறுக்கிய பழங்களுடன் சேர்த்து புட்டிங் போல காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும் மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

- ஊறவைத்து சியா விதைகளை யோகர்ட்டுடன் சேர்த்து புட்டிங் போல சாப்பிடலாம். யோகர்ட்டு வயிற்றுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்யும். மேலும் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் கிடைக்கும்.

- ஸ்மூதேதி அல்லது சாலட்களில் ஊற வைத்த சியா விதைகளை கலந்து சாப்பிடலாம்.

- தயிர் அல்லது ஓட்ஸ் உடன் சியா விதைகளை சேர்த்து சாப்பிடலாம்.

சியா விதைகளை காலையில் சாப்பிடலாமா?

  • தினமும் காலை சியா விதைகளை சாப்பிட்டு வந்தால் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி அதிலிருக்கும் புரதம் மற்றும் நார்ச்சத்து நாள் முழுவதும் உங்களை முழுமையாக உணர வைக்கும்.
  • உடற்பயிற்சிக்கு முன் சியா விதைகளை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் நீரேற்றத்தை வழங்கும். அதாவது, சியா விதைகளில் இருக்கும் புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடற்பயிற்சி செய்யும் போது தேவையான ஆற்றலை தக்க வைக்க பெரிதும் உதவும்.

மாலை வேளையில் சியா விதைகளை சாப்பிடுவதன் நன்மைகள்:

மாலை வேளையில் சியா விதைகளை சாப்பிட்டால் சிறந்த செரிமானத்திற்கு உதவும. அதுபோல இரவு உணவுக்கு முன் சியா விதைகளை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், நல்ல தூக்கத்தை தரும் மற்றும் எடை இழப்புக்கு உதவும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு சியா விதைகளை சாப்பிடலாம்?

சியா விதைகள் எடையை குறைக்க உதவும் என்றாலும், அதை அதிகமாக எடுத்த கொள்ளக் கூடாது. இல்லையெனில், குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே 1-2 ஸ்பூன் அளவு மட்டும் சாப்பிட்டால் போதும்.