What are the medical properties in the acetic acne but the best of these problems
வெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கல்களில் பயிரடப்படும் சிருமென் மரவகை. தமிழ்நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது.
கீரை, பூ,பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகிறது. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.
1. கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, டீ இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.
2. அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.
3. இலைச்சாறும் நல்லெண்ணையும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்துரி மஞ்சள், சாம்பராணி, கிச்சிலிக் கிழங்கு விலாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி (அகத்தி தைலம்) வாரம் ஒருமுறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெரும்.
