ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் சிறுதானியங்கள் நமக்கு அவசியம் தேவை!
உடற்பயிற்சியின்மை, சத்தான உணவின்மை மற்றும் சோம்பேறித்தனம் உட்பட பல காரணங்களால் இன்றைய தலைமுறையினர் வெகு விரைவிலேயே சோர்ந்து விடுகின்றனர். அதே சமயத்தில் நம் தாத்தா, பாட்டி பலரும் இன்னமும் 'குடு குடு' என ஓடியாடி, உற்சாகமாக வலம் வருகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது கம்பு, சாமை மற்றும் ராகி போன்ற ஆரோக்கியமான உணவு முறையே ஆகும். அன்றைய காலத்து கம்பஞ்சோறும், ராகிக்கூழும் இன்றும் பலரின் மிகப்பிடித்த உணவாக இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் பலரும் ராகி, கம்பு மற்றும் சோளம் போன்ற பாரம்பரிய சிறுதானிய உணவுப்பொருட்களுக்கு மாறி வருகின்றனர்.
சிறுதானியங்கள்
ராகி, கம்பு மற்றும் சோளம் போன்ற சிறுதானிய உணவுகளில் புரதம், மெக்னீசியம், இரும்பு மற்றும் கால்சியம் உட்பட பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. இதனால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதால் நீரிழிவு பாதிப்பை தடுக்க உதவுகிறது.
அடிக்கடி உணவில் தினை வகைகளை சேர்த்துக் கொள்வதால், பருமனாக இருப்பவர்களின் உடல் எடையை ஆரோக்கியத்துடன் கணிசமாக குறைக்க முடியும். மேலும், இதனால் குடல் ஆரோக்கியமும் மேம்படும்.
Carrot Juice: ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் போதும் இந்த 7 நன்மைகள் உங்களுக்கு கிடைக்க!
இவற்றிலுள்ள டானின்கள், லிக்னான்கள் மற்றும் பாலிகோசனால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நம் உடலில் உள்ள எல்.டி.எல்., எனும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், எச்.டி.எல்., எனும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. இரத்த நாளங்களை ஆரோக்கியமாக பராமரிக்கவும் உதவுகிறது. இதனால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் பாதிப்பு தடுக்கப்படுகிறது.
தினையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடல் எடை குறைப்புக்கு இந்த தினை வகை உணவுகள் பக்கபலமாக இருக்கிறது. மலச்சிக்கல், வாய்வு, வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை தவிர்க்கப்படுகிறது. நம் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. ஆகவே இட்லி, தோசை, ரொட்டி, ஸ்மூத்தி, கஞ்சி மற்றும் கூழ் உட்பட பல்வேறு வகை உணவுகளாக சிறுதானியங்களை நாம் பயன்படுத்தி வரலாம்.