Asianet News TamilAsianet News Tamil

நீண்ட நாள் ஆரோக்கியமா, தெம்பா வாழணுமா? இதோ உங்களுக்கான எளிய பயிற்சி…

want to live long Here is the simple practice for you ...
want to live  long Here is the simple practice for you ...
Author
First Published Aug 22, 2017, 1:36 PM IST


நுரையீரல் நேரம்

அதிகாலை 3 முதல் 5 மணி வரை

இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

பெருங்குடல் நேரம்

காலை 5 முதல் 7 வரை

இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

மண்ணீரல் நேரம்

காலை 9 முதல் 11 வரை  

இந்த நேரத்தில் வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

இதயத்தின் நேரம்

காலை 11 முதல் 1 வரை  

இந்த நேரத்தில் இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

சிறுகுடல் நேரம் 

பிற்பகல் 1 முதல் 3 வரை  

இந்த நேரத்தில் மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

சிறுநீர்ப் பையின் நேரம்

பிற்பகல் 3 முதல் 5 வரை  

இந்த நேரத்தில் நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

சிறுநீரகங்களின் நேரம்

மாலை 5 முதல் 7 வரை  

இந்த நேரத்தில் தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

பெரிகார்டியத்தின் நேரம்

இரவு 7 முதல் 9 வரை  

பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம். உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம்

இரவு 9 முதல் 11 வரை  அமைதியாக உறங்கலாம்.

பித்தப்பை நேரம்

இரவு 11 முதல் 1 வரை  அவசியம் உறங்க வேண்டும்.

கல்லீரல் நேரம்

இரவு 1 முதல் 3 வரை  

இந்த நேரத்தில் ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios