நாக்கில் இந்த அறிகுறிகள் இருக்கா...அப்போ ’வைட்டமின் டி’ குறைபாடு தான் காரணம்..!
நாக்கில் பின்வரும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அதனை கவனித்து தகுந்த முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
பொதுவாக போதிய அளவு சூரிய ஒளி பெறாதவர்கள் மற்றும் தவறான முறையில் உணவுகளை உண்ணுதல் ஆகியோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று தான் வைட்டமின் டி குறைபாடு. இக்குறைபாடு காரணமாக நமது உடலில் உள்ள எலும்புகள் பலவீனமாகவும், தசைப்பிடிப்பு, சோர்வு போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதனால் சில சமயத்தில் மனநலப் பிரச்சினைகள் கூட ஏற்படலாம். இது போன்ற ஊட்டச்சத்து குறைபாடு நமது உடலில் உள்ளதா என்று அவ்வப்போது பரிசோதனை செய்து மிக்க நல்லது.
ஒரு சில அறிகுறிகளின் மூலம் வைட்டமின் டி குறைபாட்டை எளிதில் அறிந்து கொள்ள முடியும். அதனை தற்போது இங்கு காணலாம்.
நாக்கு - வைட்டமின் டி:
நாக்கிற்கும் வைட்டமின் டி-க்கும் ஒரு சில தொடர்புகள் உள்ளது. வைட்டமின் டி குறைபாடு இருக்கு போது நாக்கில் எரிச்சல், அல்லது கூச்ச உணர்வு போன்ற வலிமிகுந்த நிலையை உண்டாக்கும்.
அறிகுறிகள் :
நாக்கு மற்றும் உதடு அல்லது வாயின் மேற்புறம் போன்ற வாயின் பிற பகுதிகளில் மிகுந்த எரிச்சல், கூச்ச உணர்வு, வலியுடன் கூடிய உணர்வின்மை, வாய் வறண்டு காணப்படுதல், சுவையில் மாற்றம் போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவத்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இது போன்ற நிலை வைட்டமின் டி குறைபாடு காரணமாகத் தான் வரும் என்று ஆணித்தரமாக சொல்ல முடியாது. எனவே, முன் எச்சரிக்கை காரணமாக சரியான நேரத்தில் மருத்துவரிடம், சரியான சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.
இதையும் படியுங்கள்: பிகினி வேக்சிங் செய்யும்போது.. இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் உரிந்த தோல்! ஸ்பாவுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்
சில பயனுள்ள குறிப்புகள் :
எரிச்சல் மிகுதியாக இருப்பதால், நீங்கள் குளிர் பானத்தைப் பருகுதல், ஐஸ் கட்டிகளை ஒத்தடம் கொடுத்தல் போன்றவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அதே வேளையில், எரிச்சலை அதிகப்படுத்தக் கூடிய புகையிலை, சூடான மற்றும் காரமான உணவுகள், மதுபானங்கள், ஆல்கஹால் கலந்துள்ள மவுத் வாஷ் மற்றும் அமிலம் அதிகம் உள்ள பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும்.