எப்போதும் ஏசி அறையில் ஒடுங்கிவிடுவதன் விளைவு, வியர்வை வெளியேறுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. ‘ஜிம் கருவிகளைப் பயன்படுத்தி, உடற்பயிற்சி செய்தால், வியர்வை அதிகம் வெளியேறும். இதனால் உடல் எடை வேகமாகக் குறையும்’ என்பது பலரின் தவறான கருத்து.

”ஃபிட்னெஸ் கருவிகளின் துணையின்றி தினசரி வீட்டிலேயே சில எளிய பயிற்சிகளைச் செய்தாலே வியர்வை நன்றாக வெளியேறும். உடலும் கட்டுக்கோப்பாக இருக்கும்.

அதுதான் ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சி

“கைகளை பக்கவாட்டில் தளர்ந்த நிலையில் வைத்து நேராக நிற்க வேண்டும். கால்களை ஒன்றாக சேர்த்துவைக்கவும்.

இப்போது இரண்டு கால்களையும் அகட்டிக் குதித்து, அதே நேரத்தில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தித் தட்ட வேண்டும்.

பிறகு, பழையபடி குதித்து கால்களை ஒன்றுசேர்த்தபடியே, கைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும்”.

இதுபோன்று 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

பலன்கள்:

குதிப்பதால் இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

உடலில் உள்ள கலோரிகள் அதிக அளவில் செலவிடப்படும்.

உடல் எடை குறையும்.

குதிக்கும்போது ஆழமாக மூச்சுவிடுவதன் மூலம் உடல் முழுவதும் ஆக்சிஜன் சென்றடைவதால், நல்ல ரத்தம் பாயும்.

கொழுப்பைக் கரைக்கும்.

தொடைச் சதை வலுப்படும்.