Varagu is good for health

வரகு

சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு.

பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

வரகின் பயன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் வெல்ல‌ப் பணியாரம், அப்பம், கஞ்சி போன்ற உணவுகளைச் சமைக்கின்றனர்.

அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலு கிடைக்கும்.

வரகில் இருக்கும் சத்துக்கள்

1.. அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.

2.. புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன.

3.. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன.

4.. விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

5.. வரகு, பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம்.