use this tips for make fitness
** எலுமிச்சை பழம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது. எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து குடித்தால், உடல் எடை எளிதில் குறையும்.
அத்தகைய சிட்ரஸ் பழமான எலுமிச்சை, உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை அழகுறச் செய்யவும் உதவியாக உள்ளது.
எனவே, எலும்மிச்சை பழத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் பயன்படுத்தி வர, ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம்.
** கார உணவுகள், உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.
** கொழுப்புக்களை கரைக்கும் சிட்ரஸ் பழங்களால் ஆன பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும். இதனால் உடல் சுத்தமாவதோடு, வயிறும் நிறைந்திருக்கும்.
** தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதோடு, கொழுப்பைக் குறைக்கும் பொளும் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.
தினமும் காலையில், வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.
** ஒரு நாளைக்கு அவ்வப்போது எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடல் வறட்சி நீங்கி, நச்சுக்கள் வெளியேறி, அடிக்கடி பசி ஏற்படுவதும் தடைப்படும். குறிப்பாக எடை குறைக்க நினைப்போர், ஜூஸில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், செயற்கை இனிப்புக்களைப் பயன்படுத்தி செய்தவற்றை சாப்பிட்டால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் கொழுப்புக்களும் அதிகரிக்கும்.
** எடையை குறைக்க நினைக்கும் போது, அதிகப்படியான நீர்பானங்களை குடிக்க வேண்டியிருக்கும். அதற்காக எப்போதுமே ஜூஸ் குடிக்க முடியாது. ஆகவே, அப்போது அதற்கு பதிலாக சூடான எலுமிச்சை சூப் சாப்பிட்டால்,புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.
** சாலட் சாப்பிடும் போது, அதை சாப்பிட போர் அடித்தால், அப்போது சாலட்டின் சுவையை அதிகரிப்பதற்கு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இதுவும் எலுமிச்சையை உடலில் சேர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
