1. படுக்கைக்குச் செல்லும் முன்பு காபி, தேநீர் போன்றவற்றை அறவே தவிருங்கள். இதில் உள்ள காபின் என்ற வேதிபொருள் மூளை அட்ரினலின் சுரப்பதை அதிகபடுத்தி தூக்கத்தை கெடுக்கிறது.

2. ஆல்கஹால் தவிருங்கள். இது போதை தருமே தவிர நல்ல ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கும். இது சில சமயங்களில் மட்டுமே பயன்தர கூடியது.

3. தூங்கச் செல்லும் சிறிது நேரம் முன்பு உங்களை தயார் படுத்த உடலையும், மனதையும் எளிதாக்கும் சில உடல் பயிற்சிகள் (stretching), யோகா, குட்டி வெந்நீர் குளியல் போன்றவை செய்யலாம்.

4. வழக்கமான அன்றாட உடல் பயற்சிகள், மாலையில் சிறிது நேரம் உங்களுக்கு பிடித்த விளையாட்டுகள் உலகத்தை மறந்த தூக்கத்தை உறுதியாக்கும்.

5. முக்கியமாக உங்கள் படுக்கையை உங்களுக்கு பிடித்த மன நிலைக்கு ஏற்றது போல இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள் அதாவது அமைதியாகவும், நல்ல காற்றோட்டமும், வெளிச்சம் குறைவாகவும் மற்றும் சௌகரியமாகவும் இருக்குமாறு அமையுங்கள்.