Asianet News TamilAsianet News Tamil

பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான் பழமொழியா...? மருத்துவ மொழியா...?

tooth important information
tooth important information's
Author
First Published Jun 22, 2017, 5:16 PM IST


தாடை எலும்புகளின் பிடிமானத்தில் தான் பற்கள் உள்ளன. பற்கள் இருந்தால் தான்பேசும் சொற்களை நன்கு உச்சரிக்க முடியும். பற்களால் தான்உணவை நன்றாக மென்று சாப்பிட முடியும். முகத்தில் பற்கள் இருந்தால் தான்,அழகாக தெரிவோம். பற்சொத்தை. இப்பாதிப்பு ஏற்பட்டால் சில பற்களை மட்டுமே இழக்க நேரிடும். ஆனால்ஈறு நோய் ஏற்பட்டால்அனைத்துப் பற்களையும் இழக்க நேரிடும். இதனால்தான் பல் போனால் சொல் போச்சு என்பார்கள். 

ஈறு நோயை கவனிக்காவிட்டால்அந்நோய் முற்றிஈறுகளில் சீழ் படிந்துவிடுகிறது. அதனால்சம்பந்தப்பட்ட எலும்புக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சீழ் வடிவதன் மூலம்பற்களில் உள்ள ரத்த நாளங்கள் மூலம்நோய்க்கிருமிகள்உடலின் மற்ற பாகங்களுக்கு சென்றுஅவற்றின் இயக்கங்களுக்கு தடையாக உள்ளன.

வாயில் உண்டாகும் நோய்கள்உணவுக்குழலையும் பாதிக்கின்றன. தொடர்ந்து நோய்க்கிருமிகளை விழுங்குவதன் மூலம்வயிற்றுப்புண் ஏற்படுவது ஒரு எடுத்துக்காட்டு. 
நோய் தாக்கிய பல் திசுக்களில் காணப்படும் நுண்ணுயிரிகளைசிறுநீரக பரிசோதனையில்வளர் பொருள் மூலம் சிறுநீரகங்களிலிருந்து பிரித்தெடுக்க முடியும். இதன் மூலம் பல் பாதிக்கப்பட்டால்சிறுநீரகங்களும் பாதிப்படையும் என்பது உறுதியாகிறது.

படைசிரங்குபொடுகுடீனியா முதலான முக்கிய பல சரும வியாதிகளுக்குபல் நோய்கள் காரணமாகின்றன. பற்கள் பாதிக்கப்பட்டுஅவை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டால்பற்களை உடனே அகற்றிவிடுவது நல்லது. அவற்றால்உடலின் பொதுநலம் பாதிக்கப்படுவதை விடஅதை அகற்றிவிட்டு செயற்கை பல் வைப்பதே நல்லது.

மிகவும் பாதிக்கப்பட்ட பல்லை எடுத்துவிட்டு செயற்கை பற்கள் கட்டப்படுகின்றன. புற்றுநோய் அறுவை சிகிச்சையால் தாடையை இழந்தோருக்குசெயற்கை பற்களைக் கொண்ட பிளாஸ்டிக் தாடைகள் பொருத்தப்பட்டுசெயற்கை பற்கள் கட்டப்படுகின்றன. செயற்கை பற்களை உபயோகிப்பவர்களுக்கு செயற்கை பற்கள் பொருத்தியவுடன்பிறரோடு பேசும் போதுசிரமமாக இருக்கும். இப்பற்கள் பழகும் வரைஇரவிலும் அணிய வேண்டும்பழகியவுடன் இரவில் தவிர்த்துவிடலாம். சிகிச்சைக்கு பின்தொடக்க காலத்தில் மென்மையான உணவுகளையே உண்ண வேண்டும். அதே போல் முன்பற்களால் உணவை கடித்து உண்ணும் பழக்கம் கூடாது. காரணம்அப்பற்கள் இடம் மாறி பிடிப்பை இழக்க நேரிடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios