அடிக்கடி வறண்டு போகும் உதடுகளை பாதுகாக்க இதைச் செய்யுங்க போதும்..!!
ஆலிவ் எண்ணெய் மூலம் தோல் மீளுருவாக்கத்துக்கு பெரிதும் உதவுகிறது. உடலில் தேவையில்லாமல் ஏற்படும் வீக்கத்தை குறைத்து ஆண்டி-ஆக்சிடண்டுகளை ஊக்குவிக்கிறது. உதடு வெடிப்பைச் சமாளிக்க உதவும் பண்புநலன்கள் ஆலிவ் எண்ணெய்யில் உள்ளன.
குளிர்காலத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று உதடு வெடிப்பு. வானிலை சற்று கடினமாக இருக்கும் காலக்கட்டத்தில் மென்மையான தோலை கொண்டவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். உணர்திறன் கொண்ட தோல்கள் விரைவாக உலர்ந்து போகிறது. இதனால் உதட்டில் வெடிப்பு மற்றும் ரத்தப் போக்கு ஏற்படுகிறது. உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் கிடையாது. அதன்காரணமாக, உடலின் மற்ற பகுதிகளைப் போல உதட்டால் ஈரப்பதத்தைத் தக்கவைக்க முடியாது. எனவே உதடுகள் வறண்டு மற்றும் வெடிப்பதைத் தடுக்க எப்போதும் லிப் பாம்களை கையில் வைத்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் உங்கள் உதடுகளை கூடுதலாக கவனித்துக்கொள்ள சில வழிகளை பார்க்கலாம்.
தேன்
பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய இயற்கையான பொருள் தான் தேன். தேனுக்கு காயத்தை ஆற்றும் தன்மையுள்ளது. மேலும் நுன்கிருமிகள் உடலை அண்டாத வகையில் இது ஆண்டிபயாடிக்காவும் செயல்படுகிறது. உதடுகளில் வெடிப்பு ஏற்படும் போது, தேனை தடவினால் காயங்களில் தொற்று ஏற்படாமல் இருக்கும். பருத்தி உருண்டையை பயன்படுத்தி உதடுகளில் தேனைத் தடவவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவினால், உதட்டில் ஏற்படும் காயம் உடனடியாக சரியாகிவிடும்.
க்ரீன் டீ
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது பாக்டீரியாக்களால் ஏற்படும் வாய் துர்நாற்றத்திற்கு எதிராக செயல்படும். உடலில் தேவையில்லாமல் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. கிரீன் டீயை உதடுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். அதன் பிறகு நன்றாக துடைத்து லிப் பாம் தடவவும். உதட்டில் ஏற்படும் வெடிப்புகள் ஒன்றிரண்டு நாட்களில் சரியாகிவிடும்.
சக்கரவள்ளிக் கிழங்கில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்..!!
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்யை உதட்டில் தடவினால், இறந்துபோன தோல் நீக்கப்பட்டு, புதிய தோல் வளரும். மேலும் இந்த எண்ணெய்யில் உதடு வெடிப்பைச் சமாளிக்க உதவும் குணப்படுத்தும் பண்புகள் இடம்பெற்றுள்ளன. சிறிது ஆலிவ் எண்ணெயுடன் கற்றாழை ஜெல் கலந்து படுக்கைக்குச் செல்வதற்கு முன் உதடுகளில் தடவினால் விரைவில் பிரச்னை குணமடைந்துவிடும்.
எலுமிச்சைப் பழம்
சருமத்துக்கும் உதட்டுக்கும் எலுமிச்சை மிகவும் நல்லது. அதன் சாற்றை உதடுகளில் தடவிவிட்டு இரவில் படுத்து தூங்கிவிடவும். தொடர்ந்து காலையில் எழுந்து உதட்டை கழுவலாம். சிறிது சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உதடுகளில் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் உதடுகளை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதன்மூலம் உதட்டின் வறண்ட சருமத்தை போகும், உதடுகள் மென்மையாகும்.