குழந்தைகளுக்கு மழைக்கால நோய் பாதிப்பு வாரமல் தடுக்க இதைச் செய்யுங்க..!!

குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால்,அதிலிருந்து மீண்டு வருவதற்குள் உடல்நலன் பெரிதும் பாதிக்கப்பட்டுவிடும். அந்த வகையில் மழைக்காலங்களில் குழந்தைகளுக்கான உடல்நலனில் எப்படி அக்கறைக் காட்டுவது என்பது குறித்த வழிமுறைகளை

tips to prevent kids form rainy season diseases

தமிழகத்தில் மழைக்காலம் துவங்கிவிட்டது. எதிர்பார்த்ததை விடவும் மழைப்பொழிவு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால், அதன் பின்னாடி மழைக்கால நோய்கள் குறித்த அச்சமும் ஏற்படும். எனினும் குறிப்பிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் போது, மழைக்கால நோய் பாதிப்பில் இருந்து நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாக்க முடியும். எப்போதும் போல மழைக்காலங்களில் குழந்தைகளை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால்,அதிலிருந்து மீண்டு வருவதற்குள் உடல்நலன் பெரிதும் பாதிக்கப்பட்டுவிடும். அந்த வகையில் மழைக்காலங்களில் குழந்தைகளுக்கான உடல்நலனில் எப்படி அக்கறைக் காட்டுவது என்பது குறித்த வழிமுறைகளை.

முதலில் இதைச் செய்யுங்கள்

உடலில் போதுமான நோய் எதிர்ப்புச் சக்தி இருந்துவிட்டால், எதுவும் எதையும் செய்ய முடியாது. அதனால் மழைக்கால நோய்களை விரட்டி அடிக்கும் அளவுக்கு குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி மிகுந்த உணவுகளை வழங்குங்கள் . இரும்புச் சத்து, தாது உப்புகள் கொண்ட உணவுகளை தரும் போது, அதன்மூலம் ஆரோக்கியம் மேம்படுகிறது. இவை கீரைகளின் அதிகம் காணப்படுகிறது. அதேபோல நொறுக்குத் தீனிகளை நிறுத்துவிட்டு பாதாம், கேரட், பேரீச்சை உள்ளிட்டவற்றை சாப்பிட கொடுங்கள். இதன்மூலமாகவும் உடம்புக்கு எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். தினசரி சமைக்கப்படும் உணவுகளில் இஞ்சி, பூண்டு, குருமிளகு மற்றும் சீரகம் போன்றவை இடம்பெறுவதை உறுதிசெய்திடுங்கள்.

ஈரப்பதமான காற்றில் வெளியே வரவேண்டாம்

மழைக்காலங்களில் நம்மைச் சுற்றி ஈரப்பதமான காற்றுதான் அதிகம் நிலவும். அப்படிப்பட்ட காற்றில் குழந்தைகளை வெளியேவிட்டால் சளிப் பிடிக்கும். ஒருவேளை வெளியே தான் இருக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டால், அதற்கு ஒருசில மருத்துவ வழிகள் உண்டு. தினமும் குழந்தை தூங்கச் செல்வதற்கு முன்பு சூடான பாலில் மஞ்சள் சேர்த்து குடிக்கக் கொடுங்கள். உங்களுடைய குழந்தை மிளகு சாப்பிடும் என்றால், அந்த பாலில் சில துளி மிளகு சேர்க்கலாம். அதேபோல வாரம் ஒருமுறையாவது குழந்தையை ஆவி பிடிக்க வையுங்கள். இது சுவாசப் பிரச்னை ஏதாவது இருந்தால், அதை சரிப்படுத்தும். 

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா- அந்த நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு?

கொசுக்களை அண்டவிடாதீர்கள்

பொதுவாக மழைக்காலம் என்றாலும் கொசுக்களால் ஏற்படும் நோய்கள் அதிகமாக பரவும். மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்டவை மழைக்காலங்களில் அதிகளவில் பாதிப்பை உண்டாகும். அதனால் குறிப்பிட்ட நோய்களின் அறிகுறிகளை தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தலைவலி, உடல் களைப்பு, தீராத காய்ச்சல், சோர்வடைந்து காணப்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். 

உணவுக் கட்டுப்பாடு அவசியம்

மழைக்காலங்களில் செரிமானம் சற்று மந்தமாகவே இருக்கும். அதனால் அளவுடன் உணவு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் அளவாகவே உணவு கொடுங்கள். தயவுசெய்து பச்சை தண்ணீரில் குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டாம். முடிந்தவரை வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டுங்கள். அதேபோல குளித்தவுடன் தலை மற்றும் உடலை துவட்டி விடுங்கள். காயவிட்டு பிறகு உடலை துடைப்பது சளிப் பிரச்னைக்கு வழிவகுக்கும். நன்றாக ஓடி, ஆடி விளையாடும் குழந்தைகள் என்றால் மூலிகை சூப், ரசம், மட்டன் சூப், கார்ன் சூப் போல செய்து கொடுங்கள். குளிர்பானங்கள், ஐஸ்க்ரீமை அவர்களுடைய கண்ணில் காட்டிவிட வேண்டாம். 

வீட்டில் கொசுக்கள் சேராதபடி நன்றாக பராமரிக்க முயற்சி செய்யுங்கள். மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல், மலேரியா, காலரா போன்ற நோய்கள் பரவ அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் வீட்டைச் சுட்டி செடிக் கொடி இருந்தால், அதை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். மாலை நேரங்களில் அடுப்பு மூட்டி வேப்பிலைகளைப் போட்டு தீ மூட்டுங்கள். அதேபோல, காலை நேரங்களில் வீட்டில் சாம்பிராணிப் புகைப் போட்டு எல்லா இடங்களிலும் காட்டுங்கள். இது கொசுவை எளிதாக விரட்டிவிடும். வாகனங்களில் பயணிக்கும் போது மாஸ்க், கையுறைகளை குழந்தைக்கு போட்டுவிடுங்கள். அவர்கள் விளையாடிவிட்டு வந்தால், வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக சோப் போட்டு குளிப்பாட்டுங்கள். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios