காற்று மாசுபாட்டில் இருந்து குழந்தைகளை காப்பதற்கான எளிய வழிமுறைகள்..!!

நுண்ணிய துகள்கள் கண்களுக்குள் நுழைந்தா, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்  உள்ளிட்டோர் கண்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கண்களை தண்ணீரில் நன்கு கழுவுவது நல்ல முயற்சியாக அமையும்.
 

tips to children and adults to protect their eyes from air pollution

காற்று மாசுபாடு பெரும் கவலையாக மாறியுள்ளது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீங்கு விளைவிக்கும் காற்று மாசு அளவு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, உடலின் உணர்திறன் மற்றும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான கண்கள் நோய்களுக்கு ஆளாகின்றன. காற்று மாசுபாடு நுரையீரலை மட்டுமல்ல, கண்களையும் பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

உட்புற காற்று மாசுபாடு கிளௌகோமா, கண்புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு (AMD) உள்ளிட்ட பல கண் நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. வயதானவர்கள் நடுத்தர வயதினரை விட, குழந்தைகள் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசுபாட்டின் நீண்டகால வெளிப்பாட்டால், அவர்களுக்கு கண் சிவத்தல், அரிப்பு, வறண்ட கண்கள் மற்றும் சில சமயங்களில் கண்களில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கரடுமுரடான தூசித் துகள்கள் உள்ளிட்டவற்றால் காற்றின் தரம் மோசமாக பாதிக்கப்படுகிறது. இதிலிருந்து குழந்தைகளை காப்பதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்வோம். நுண்ணிய துகள்கள் கண்களுக்குள் நுழைந்தாலும், கண்களை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கண்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலையிலும் மாலையிலும் வெளியில் புகை மூட்டம் அதிகமாக இருக்கும் போது வெளியே செல்வதை தவிர்க்கவும். 

ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க இந்த ஒரு இலை போதும்..!!

வெளியில் செல்லும் பெரியவர்கள் பாதுகாப்புக்காக சன்கிளாஸ்களை அணியுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். முகமூடிகள் நமது நுரையீரலைப் போல செயல்படுகின்றன, கண்ணாடிகள் நம் கண்களைப் போல செயல்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளவும். அதனால் காற்று மாசு அதிகமுள்ள பகுதிகளில் வாழ்பவர்கள் கூடுமானவரை முகத்துக்கு முகக்கவசமும் மற்றும் கண்களுக்கு கண்ணாடிகளும் அணிந்துகொள்ளுங்கள். 

கண்களின் தசைகளை தளர்த்துவதற்கு ஒரு நாளைக்கு 2-3 முறை பரிந்துரைக்கப்பட்ட கண் சொட்டுகளுடன் கண்களை பாதுகாத்திடுங்கள். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் குடிப்பது உடலுக்கும் கண்களுக்கும் நல்லது. இது உங்கள் உடலை தண்ணீர் சத்துடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios