Asianet News TamilAsianet News Tamil

மருந்துகள் சாப்பிடும் பெண்கள் தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டலாமா, நிறுத்த வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

Tips for Breastfeeding Mothers
Tips for Breastfeeding Mothers
Author
First Published Apr 16, 2018, 2:36 PM IST


பாலூட்டும் தாய்மார்கள் ஏதேனும் மருந்துகள் உட்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படுமேயானால், தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டலாமா, நிறுத்த வேண்டுமா என்பதைக் கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும் குழந்தைகள் நல மருத்துவர் சில டிப்ஸ் வழங்கியுள்ளார்.

• தாய்ப்பாலில் கலக்கக்கூடிய மருந்தின் அளவு.

• மருந்தின் வீரியத்தை குழந்தை பெறக்கூடிய அளவு.

• மருந்து குழந்தைக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு.

• குழந்தை உட்கொள்ளும் தாய்ப்பாலின் அளவு, குழந்தையின் வயது மற்றும் பிற திட, திரவ உணவுகளைக் குழந்தை உட்கொள்ளும் அளவு எப்நெப்ரின், ஹிப்பாரின், இன்சுலின் போன்ற சில மருந்துகள் தாயிடமிருந்து தாய்ப்பாலில் கலப்பதில்லை.

எனவே, இம்மருந்துகள் உட்கொள்ள பாதுகாப்பானவை. சில மருந்துகள் தாய்ப்பாலில் கலக்கும் தன்மையுள்ளவை, இருப்பினும் இந்தகுறைந்த அளவு கூட குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். சில மருந்துகள் தாய்பாலில் கலக்கப்படும். ஆனால் மிகக்குறைந்த அளவே குழந்தையின் உடலில் சென்றடைவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை உதாரணமாக, நோய் எதிர்ப்பு மருந்துகள், ஜெண்டமைசின், கானாமைசின், ஸ்டெப்ரோமைசின் மற்றும் டெட்ராசைக்ளின்.

மருத்துவரால பரிந்துரைக்கப்படாத சாதாரண இருமல் மருந்துகள், ஜீரணக் கோளாறுகளுக்கான மருந்துகள், ஒவ்வாமை மருந்துகள் ஆகியவற்றை பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்வதால் குழந்தைக்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால், தொடர்ந்து, பெரிய அளவில் ஆஸ்ப்பிரின், சாலிசைலேட் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

தோலின் மேற்புறத்தில் தடவப்படும் மருந்துகள், கண்களில் போடப்படும் மருந்துகள், மூக்கால் உறிஞ்சப்படும் மருந்துகள் ஆகியன பாதுகாப்பான மருந்துகளே. உயர் இரத்த அழுத்த்த்திற்கான மாத்திரைகள், பீட்டா தடுப்பான்களும் பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக்கூடிய மருந்துகளே. ஆனால், கோக்குமாடின் போன்ற மருந்துகள் மருத்துவரின் கண்காணிப்போடு உட்கொள்ளவேண்டும். காஃபின், தியோபில்லின் போன்ற மருந்துகள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனினும் குழந்தைகளுக்கு எளிதில் எரிச்சலூட்டக் கூடியவை.

குழந்தையின் இதயத்துடிப்பு, மூச்சு இரைப்பு ஆகியன அதிகமாகக் கூடும். பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக் கூடிய பல மருந்துகள் குழந்தைக்கு ஏதும் பாதிப்பை உண்டாக்காதவை என்ற போதிலும், மருத்துவரின் ஆலோசனையும், பரிந்துரையும் இன்றி மருந்து மாத்திரைகளையோ, பச்சிலை மருந்துகளையோ உட்கொள்ளாமல் இருப்பதே நல்லதாகும். மருந்துகளின் மேற்குறிப்பு அட்டையை முழுமையாகப் படித்து பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏதேனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios