Asianet News TamilAsianet News Tamil

Thumbai poo: தும்பைப்பூ பத்தி தெரியுமா? கசக்கி 2 சொட்டு எடுத்தால்.. அதை வைத்து பல நோய்களை விரட்டலாம்..!

Thumbai poo: தும்பைப்பூ நம்ம உடலை முழுக்க பராமரிக்கும்.. அந்த செடி முழுக்க மருத்துவகுணம் கொண்டது. 

Thumbai poo benefits
Author
First Published Mar 18, 2023, 8:09 PM IST

தும்பை செடி முழுக்கவே மருத்துவ குணம் கொண்டது. இனிப்பு, காரச் சுவை கொண்ட இந்த செடி, வெப்பத் தன்மை உடையது. கொடிய விஷ பூச்சியோ, விஷ ஜந்துவோ எது கடித்தாலும் தும்பைப்பூவும், தும்பை இலையும் அந்த விஷத்தை அப்படியே முறித்து விடும் மகிமை கொண்டது. 

தும்பைப்பூ, தும்பை இலைகளை சரிசமமாக எடுத்து அம்மியில் அரைத்து சாறு எடுத்து, அதில் கொஞ்சம் வடிகட்டி பருக வேண்டும். தும்பைப் பூவையும், இலையையும் விழுதாக அரைத்து விஷப் பூச்சி கடித்த இடத்தில் கனமாக பற்று போல வையுங்கள்.  விஷம் கொஞ்ச நேரத்தில் முறியும்.  

தும்பைப்பூ வைத்தியம்

  • தலைவலி, சளி, மூக்கில் சதை வளர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு எல்லாம் தும்பை அருமருந்து. எப்படி தெரியுமா? தும்பைப்பூவை 50 கி எடுத்து,  நல்லெண்ணெய் ஊற்றி காய்ச்சி, மிதமான சூட்டில் தலையில் தேய்க்க வேண்டும். பின்னர் வெந்நீரில் குளித்தால் சட்டென நிவாரணம் கிடைக்கும் என்பார்கள் பெரியவர்கள். தும்பை பூ போட்டு வைத்த நல்லெண்ணெய்யை தேய்த்தால் ரொம்ப நல்லது. 

இதையும் படிங்க: Avoid Rats: வீட்டில் எலி தொல்லையா? இந்த 1 பொருளை மட்டும் வைத்தால்... உங்க வீட்டு பக்கம் எட்டி கூட பார்க்காது

  • தீராத தலைவலியா? கொஞ்சம் தும்பைப்பூவை கசக்கி 2 சொட்டு மூக்கில் வைத்து இழுத்தால் உடனடியாக பலன் கிடைக்கும். இந்த மருந்தை எடுக்கும்போது உணவில் அசைவம் இருக்கக் கூடாது. நான் வெஜ் உணவுகள்,  உப்பு, புளி, ஆகியவையும் சேர்க்கக் கூடாது.
  • காய்ச்சல் இருப்பவர்களுக்கும் தும்பைப்பூ சூப்பர் மருந்து. தும்பைப்பூ, அதே அளவு மிளகு போட்டு நல்ல மையாக அரைத்து கொள்ளுங்கள். அந்த சின்ன உருண்டைகளை நிழலில் உலர வையுங்கள். இந்த உருண்டைகளில் ஒன்றை நிலவேம்பு கஷாயத்தில் போட்டு கலந்து குடித்தால், காய்ச்சல் குணமாகும். 
  • ஜலதோஷம், இருமலா? தும்பைப்பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதன் சாறை குடியுங்கள். 
  • தும்பைப்பூவின் 2 துளி சாறு,  மிளகுத்தூள் 2 ஸ்பூன், கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவர்களின் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும். 

இதையும் படிங்க: பங்குனி உத்திரம் 2023 எப்போது? விரத முறை.. வழிபாடு பலன்கள் முழுதகவல்கள்.!

Follow Us:
Download App:
  • android
  • ios