MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Avoid Rats: வீட்டில் எலி தொல்லையா? இந்த 1 பொருளை மட்டும் வைத்தால்... உங்க வீட்டு பக்கம் எட்டி கூட பார்க்காது

Avoid Rats: வீட்டில் எலி தொல்லையா? இந்த 1 பொருளை மட்டும் வைத்தால்... உங்க வீட்டு பக்கம் எட்டி கூட பார்க்காது

Eli thollai neenga Tamil: வீட்டில் எலிகள் தொல்லை குறைய சில எளிய டிப்ஸ் மட்டும் தெரிந்து கொண்டால் போதும். எலி தொல்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. 

2 Min read
Author : maria pani
Published : Mar 17 2023, 06:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

வீட்டில் எலிகள் அதிகமாக இருந்தால் ஒரு பொருளை வைக்க முடியாது. எல்லா பொருளையும் கொறித்து நாசமாக்கிவிடும். அவற்றை கொல்ல உங்களுக்கு விருப்பம் இல்லை.. விரட்டியடித்தால் போதும் என்றால் இந்த டிப்ஸ் உங்களுக்கு நல்ல உதவியாக இருக்கும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

எலி எச்சங்களை அடிக்கடி சுத்தம் செய்து வீட்டை சுத்தமாக வையுங்கள். எலிகளின் எச்சம் பூச்சிகளை ஈர்க்கும். இதனால் பூச்சி தொல்லையும் வரத் தொடங்கும். இருட்டான குப்பை இடங்களை எலிகள் விரும்பும். அதனால் வீட்டை காற்றோற்றமாக, வெளிச்சத்துடன் சுத்தமாக வையுங்கள். வீட்டு சாக்கடை குழாய், சிங்க் குழாய், கழிவறை ஓட்டைகளை ஒழுங்காக மூடி பராமரியுங்கள். 

36

புதினா வாசனை...

எலிகள் எந்த இடங்களில் அதிகமாக அட்டகாசம் செய்கிறதோ அந்த இடத்தில், புதினா எண்ணெய்யை ஒரு துண்டு பஞ்சில் நனைத்து வையுங்கள். உங்கள் வீட்டின் மூலை முடுக்குகளில் இந்த புதினா எண்ணெய் நனைத்த பஞ்சை வையுங்கள். எலிகள் படிப்படியாக மறைந்துவிடும். மேலும் புதினா ப்ளேவர்டு ஸ்பேரே பயன்படுத்தலாம். எலிகளுக்கு புதினாவின் நறுமணம் பிடிக்காது, உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடும். 

46

மிளகு... 

கொஞ்சம் கூட காசு செலவு வைக்காத முறை இது தான். வீட்டு சமையலறையில் இருக்கும் மிளகை பொடித்து கொள்ளுங்கள். எலி வரும் பகுதிகளில் வீட்டு மூலை முடுக்குகளில் எல்லாம் மிளகுப் பொடியை தூவி விடுங்கள். இந்த மிளகு நெடி எலிகளை விரட்டி விடும். 

56

பிரியாணி இலை 

பிரியாணி இலைகளின் வாசனை எலிகளுக்கு பிடிக்கும் என்பதால் அதை சாப்பிட்டு விடும். ஆனால் பிரியாணி இலைகளை எலிகள் சாப்பிட்டால் உயிரிழக்கலாம். எலி அட்டகாசம் செய்யும் இடங்களில் பிரியாணி இலைகளை போடுங்கள். 

இதையும் படிங்க: காலையில் எழுந்ததும் இந்த பொருள்களை பார்த்தால் அதிர்ஷ்டம்... உங்க பாக்கெட்ல பணம் நிரம்பி கொண்டே இருக்கும்

66

கற்பூரம் 

கற்பூர வாசனை எலிகளுக்கு சுத்தமாக பிடிக்காது. வீட்டிலிருந்து எலிகளை விரட்ட, வீட்டின் மூலை முடுக்கெல்லாம் கற்பூரத் துண்டுகளை வையுங்கள். இதனால் எலிகள் தானாகவே வீட்டை விட்டு சென்றுவிடும். 

படிகாரம் 

படிகாரத் தூளை கரைத்து எலிகள் இருக்கும் இடங்களில் தெளித்தால், அந்த இடத்தை விட்டு எலிகள் நிரந்தரமாக சென்றுவிடும். 

இதையும் படிங்க: வீட்டில் பல்லி தொல்லை நிரந்தரமா போகனுமா? ஒரு எலுமிச்சை போதும்.. பல்லியை ஓட ஓட விரட்டி அடிக்கலாம்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
டீ, காபி கறை முதல் செல்லப் பிராணிகள் முடி வரை... சோஃபா உறையைக் கழற்றாமல் நிமிடங்களில் பளிச்சென மாற்றும் டிப்ஸ்!
Recommended image2
D-Mart : இங்கே குறைவான விலையில் கிடைக்கும் 10 பொருட்கள்! என்னென்ன தெரியுமா?
Recommended image3
Detox Drinks: செரிமானத்தை சீராக்கும் 8 எளிய டிடாக்ஸ் பானங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved