Those who sleep for more than eight hours will get this illness. Inspection ...

இரவு நேரங்களில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்கள் டிமென்டியா எனும் மனநோயால் பாதிக்கப்படும் அபாயத்தை பெறுகின்றனர். 

அதுமட்டுமின்றி அல்சைமர்ஸ் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புறும் நோயின் தாக்கத்தின் ஆரம்ப அறிகுறிகளும் வெளிப்படும் என்று ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்சைமர்ஸ் மற்றும் டிமென்டியா குறித்து ஆய்வானது சராசரியாக அறுபது வயதுடைய சுமார் 2500 பேரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக, தொடர்ச்சியாக தூங்கியவர்களுக்கு அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருமடங்கு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதாக அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும், தொடர்ச்சியாக எத்தனை மணி நேரங்கள் தூங்குகிறார்கள் என்றால் டிமென்டியா எனப்படும் மனநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளது.