Asianet News TamilAsianet News Tamil

சுடுதண்ணீரில் இந்த மூன்றையும்  கலந்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கு...

This three items mix with hot water and drink ...
This three items mix with hot water and drink ...
Author
First Published Apr 14, 2018, 12:56 PM IST


எலுமிச்சை, உப்பு, மிளகுத்தூள் ஆகிய பொருட்கள் உடல் ரீதியாக ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக உள்ளது. எனவே சுடுதண்ணீரில் உப்பு, மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளோ எராளம்.

** வெதுவெதுப்பான நீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதால், உடலினுள் வெப்பம் தூண்டப்பட்டு, சுவாசக் குழாய்களில் உள்ள அழற்சிகள் நீக்கப்பட்டு, மூக்கடைப்பில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

** சூடான நீரில் இதனை கலந்து குடிப்பதால், அதில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள், கெட்ட பாக்டீரியாக்கள் அழித்து, தொண்டைப் புண் மற்றும் தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

** பித்தக்கற்கள் இருப்பவர்கள், உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சையுடன் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், பித்தக்கற்கள் கரையும்.

** தினமும் காலையில் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் மிளகுத் தூள், சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும்.

** பல்வலியால் கஷ்டப்படுபவர்கள், இந்த கலவையால் தினமும் வாயைக் கொப்பளித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை கிருமிகளை அழித்து, பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

** காய்ச்சல் பிரச்சனை இருக்கும் போது, சுடுநீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை, தேன் ஆகியவற்றை சேர்த்து கலந்து குடித்து வந்தால், காய்ச்சலை ஏற்படுத்திய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரித்து, காய்ச்சலை குணமாக்குகிறது.

** உப்பு மற்றும் மிளகுத் தூள் வயிற்றில் உள்ள அமிலங்களை சுரக்கச் செய்யும் தன்மைக் கொண்டது. எனவே இதை குடித்தால், எலுமிச்சையின் மணம் குமட்டலைக் குறைத்து, வயிற்றுப் பிரச்சனைகள் தடுக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios