Asianet News TamilAsianet News Tamil

இந்த சூப் குடித்தால் சர்க்கரை  நோயாளிகளுக்கு மிகவும் நல்லது...

This soup is good for diabetic patients
This soup is good for diabetic patients
Author
First Published Feb 28, 2018, 2:16 PM IST


வேப்பம்பூ சூப் குடித்தா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

வேப்பம்பூ சூப் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள் :

வேப்பம் பூ – 4 டீஸ்பூன்,

வெண்ணெய் – 4 டீஸ்பூன்,

காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் – 1 கப்,

எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,

பனங்கற்கண்டு – 4 டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை :

** வாணலியில் வெண்ணெய் காய்ந்ததும், அதில் வேப்பம்பூவைப் போட்டு வறுக்கவும்.

** வேப்பம் பூ நன்கு வறுபட்டதும் இதனுடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும்.

**பின்பு இறக்கி ஒரு மெல்லிய துணியில் வடிகட்டவும்.

**இதனுடன் காய்கறிகள் வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம்.

**கசப்பே இல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சூப் இது. சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒருமுறை  இந்த சூப்பை குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு படிப்படியாக குறையும்.

Follow Us:
Download App:
  • android
  • ios