This soup can be reduced by three kilos per week if you drink everyday ...
உடல் எடையை குறைக்க உதவும் சூப்...
தேவையான பொருட்கள்
அரைத்த தக்காளி – ஒரு கப்
செலரி – ஒரு கட்டு
நறுக்கிய கேரட் – 3
மெல்லிய துண்டுகளாக வெட்டிய முட்டைக்கோஸ் – ஒன்று
பெரிய வெங்காயம் – 6
அரைத்த பச்சை பட்டாணி – 2 கப்
செய்முறை
எல்லா உணவுப் பொருட்களையும் ஒரு பானையில் ஒன்றாக மசாலாப் பொருட்கள் சேர்த்து போடவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். பத்து நிமிடங்கள் கழித்து, சூட்டை குறைத்துக் கொண்டு, காய்கறிகள் நன்கு வேகும் வரை ஸ்லிம்மில் வைக்கவும்.
இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் 3 கிலோ குறைக்கலாம்.
கொழுப்பை கரைக்கும் இந்த சூப்பை, தினமும் உங்கள் அன்றாட உணவுடன் சேர்த்து பருகுங்கள்.
இந்த சூப் பருகும் டயட் நாட்களில் ப்ரெட், பாஸ்தா, நூடுல்ஸ், வறுத்த உணவுகள், அதிக கொழுப்பு சத்து உடைய உணவுகள் மற்றும் மைதா உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
முக்கியமாக இந்த டயட் நாட்களில் கார்போனேட்டட் பானங்களை குடிக்க கூடாது.
ஆல்கஹால் அருந்த கூடாது.
இந்த முறைகளை சரியாக பின்பற்றும் பட்சத்தில் நீங்கள் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும்.
