This is the reason why sleep can not exist ... the solution is inside ...

தூக்கம் வராமல் இருக்க காரணங்கள்?

** இரவு உறங்கும் வேளையிலும், நாளைய பொழுதையும், இனி வரும் நாட்களையுமே நினைத்து, நம்முடைய நிகழ்காலத்தை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கழிக்க முடியாமல், ஏதேதோ கற்பனைகள் கொண்ட எதிர்காலத்திலேயே மனத்தை செலுத்தி, இழப்பது நிகழ்காலத்தை மட்டுமல்ல, நம்முடைய நாளைய பொழுதுக்குத் தேவையான உந்து சக்தியை நலமுடன் தரும் நல்ல தூக்கத்தையும் சேர்த்துதான்.

** சில உடல் நலக் கோளாறுகள் காரணமாக, நீண்ட நாட்கள் தொடர் மருந்துகள் எடுத்துக்கொள்வதாலும், சிலர் தூக்கத்தை தூக்கத்தை இழக்க நேரிடலாம். சிலருக்கு வயது முதிர்வின் காரணமாகவும் தூக்கமின்மை ஏற்படலாம். ஆனால் அதுவும் மன நலன் சார்ந்ததே.

** வயதானவர்களின் மன நிலை, நல்ல நிலையில் இருக்கும் போதே, இயற்கை எய்திட வேண்டும், உடல்நலம் கெட்டு மகனுக்கோ அல்லது மகளுக்கோ, யாருக்கும் பாரமாகி விடக்கூடாது எனும் நிலையில் இருக்கும் அந்த எண்ணமே, அதிகமாகி, அதன் காரணமாகவே, அவர்கள் தூக்கத்தை இழந்து சிரமப் படுகின்றனர்.

எப்படி தூக்கத்தை வரவழைப்பது?

** தூக்கத்தை வலுக்கட்டாயமாக வரவழைக்க எண்ணினால், அது ஏமாற்றத்தில்தான் போய் முடியும். அதீத சிந்தனை, மனக் கிளர்ச்சி மற்றும் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த மற்ற சில காரணங்களால், நாம் நல்ல உறக்கத்தை இழந்துவிட்டோம். 

** எனவே, தூக்கம் இயல்பாக வரும் நிலைக்கு நாம் நம்முடைய மன நிலையை அட்லீஸ்ட், படுக்கைக்கு செல்லும் நேரத்திலாவது, மாற்றிக் கொள்ளவேண்டும்.

லைட்டான உணவு:

** இரவில் மிதமான உணவுகளையே உண்ண வேண்டும், ஜங் புட் தவிர்த்து, வேக வைத்த உணவுகளையோ அல்லது பழங்களையோ உண்ணலாம், மேலும், எல்லோருக்குமே பொதுவானது, இரவு உணவு நமக்கு பசிப்பதைவிட குறைவாகவே, உண்ண வேண்டும்.

** உறங்கப்போகும் ஒரு மணி நேரத்திற்குள் இரவு உணவை உட் கொண்டிட வேண்டும், சாப்பிட்ட பின், சிறிது நேரத்தை குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக செலவிடலாம். நல்ல நூல்கள் ஆயிரம் நண்பர்களுக்கு சமம் என்பதற்கேற்ப, நல்ல நூல்களை சற்று நேரம் வாசிக்கலாம், ஏற்கெனவே படித்திருந்தாலும், சற்று நேரம் திரும்ப வாசித்தாலும் தவறில்லைதானே.

** இவற்றை எல்லாம் செய்துவிட்டு, கை கால்களை நன்கு கழுவி விட்டு, சிறிது நீர் பருகிவிட்டு, படுக்கைக்குச் செல்லலாம், படுக்கையில் எப்போதும் இடது புறம் ஒருக்கணித்தேப் படுக்கவேண்டும். இதன் பின் படுக்கையில் சற்று நேரம் நேர்வினைச் சிந்தனைகளையே எண்ணுங்கள். தூக்கம் வந்துவிடும்.