Asianet News TamilAsianet News Tamil

தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பதற்கு இதுதான் சான்று…

This is the proof that yogurt is good for your body ...
this is-the-proof-that-yogurt-is-good-for-your-body
Author
First Published May 9, 2017, 1:45 PM IST


தயிர் ஒரு ஒரு அற்புத மருந்து என்பது பலருக்கு தெரிவதில்லை.

சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது, சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது.

1.. தயிர் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது.

2.. பால் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 91 சதவீதம் ஜீரணப்பட்டிருக்கும்.

3.. தயிரில் உள்ள லாக்டோபேசில் என்ற என்சைம் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது.

4.. வயிறு சரியில்லாதபோது தயிர் சோற்றை சாப்பிட மருத்துவர்கள் சொல்வது இதனால்தான்.

5.. அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும்போது வெந்தயத்துடன் தயிர் ஒரு கப் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொறுமல் அடங்கும்.

6.. பிரியாணி போன்ற உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடும்போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் வெங்காயம் சாப்பிடுகிறோம்.

7.. உடலுக்கு தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

8. தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்துகளும் அடங்கியுள்ளன.

9. கால்சியமும், ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி-யும் தயிரிலிருந்தே பெறப்படுகின்றன.

10. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும். நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்கும். சூரிய ஒளியால் பாதிக்கப்டும் நரம்புகளையும், தோல்பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கு தயிர்தான் சிறந்த மருந்து.

11. மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனை கலந்து உட்கொள்வது சிறந்த உணவாகும்.

12. மலம் கழித்த பின்னர் சிலருக்கு மலக்குடல் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு அருந்தி இதை குணப்படுத்தலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios