This can be done to get healthy kidneys and protect them ...
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ள:
உடல் உறுப்புகளில் நாம் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது உறுப்பு சிறுநீரகம். நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உடல் உறுப்பு சிறுநீரகம்.
சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டு உடலில் சுத்திகரிப்பு செயல் தடைப்பட்டால் மெல்ல, மெல்ல மற்ற உடல்களிலும் செயற்திறன் குறைபாடு ஏற்பட துவங்கும். எனவே, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
முக்கியமாக வாரம் ஒரு நாளாவது தண்ணீர் டயட் அல்லது விரதம், பழங்கள் மட்டும் உண்டு வரலாம். இது சிறுநீரகங்கள் நன்கு செயலாற்ற உதவும்.
இன்னும் சில ஆயுர்வேத குறிப்புகள் மூலம் சிறுநீரகங்கள் பாதிப்படையாமல் எப்படி பார்த்துக் கொள்ள முடியும் என்பதை இங்கே பார்க்கலாம்….
1.. சிறுநீரக கோளாறுகள் ஏற்படாமல் இருக்க, தக்காளியை சேர்க்கும் போது விதைகளை தவிர்த்துவிடுங்கள்.
2.. சிறுநீர் கற்களை கரைக்க மாதுளை பழத்தின் விதைகளை சாப்பிட்டு வரலாம். இது நல்ல பலன் அளிக்கும்.
3.. வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் அடைப்பு தானாக சரியாகும்.
4.. வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் சிறுநீர் கற்களை கரைக்க உதவும்.
5.. பூசணி சாற்றை செம்பருத்தி பூவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சலை குறைக்கும்.
6.. பருப்பு கீரை தண்டை அரித்து, அடி வயிற்று பகுதியில் பற்று போட்டு வந்தால், சிறுநீர் எரிச்சலை குறைக்கலாம்.
7.. கடுகை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.
8.. பரங்கிக்காய் விதையை வறுத்து, பொடி செய்து, சுடுநீரில் ஊற வைத்து பருகி வந்தால் சிறுநீர் வீக்கம் குறையும்.
