These symptoms are more likely to have high blood pressure ...
உயர் இரத்த அழுத்தத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
மூச்சுவிடுவதில் சிரமம்
உங்களுக்கு திடீரென்று மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால் மற்றும் மிகவும் சோர்வாக இருப்பதை உணர்ந்தால், அதுவும் உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியாகும்.
மூக்கில் இருந்து இரத்தம் வழிதல்
மூக்கில் இருந்து இரத்தம் அடிக்கடி வழிகிறதா? அதிலும் ஒரு வாரத்தில் பலமுறை மூக்கில் இருந்து இரத்தம் வழிந்தால், அது உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறி. ஏனெனில் அதிகப்படியான இரத்த அழுத்தத்தினால், மூக்குகளில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, இரத்தம் வழிகிறது.
தலைவலி
நாம் சாதாரணமாக நினைத்து புறக்கணிக்கும் ஓர் பிரச்சனை தான் தலை வலி. ஏனெனில் இந்த தலைவலியானது ஒற்றைத் தலைவலியுடனோ அல்லது புரையழற்சியுடன் தொடர்புடையதாக இருக்கும் என்பதால் தான். ஆனால் தலைவலியானது திடீரென்று அளவுக்கு அதிகமானால், அது உயர் இரத்த அழுத்தத்திற்கு ஓர் அறிகுறியாகவும் இருக்கும். இதற்கு மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, உடலின் மற்ற உறுப்புகளுக்கு இரத்தம் வேகமாக அழுத்தப்படுவது காரணமாகும்.
மங்கலான பார்வை
தலைச்சுற்றல் அல்லது மங்கலான பார்வை கூட உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையவை. மேலும் மங்கலான பார்வையினால் கண் மருத்துவரை சந்தித்து பரிசோதித்து எந்த ஒரு பிரச்சனையும் தெரியாவிட்டால், உடனே இரத்த அழுத்த பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
வேகமான இதய துடிப்பு
சாதாரணமாக சிறிது தூரம் நடந்தாலோ அல்லது எடையுள்ள பொருட்களை தூக்கினாலோ, மாடிப்படிக்கட்டுக்கள் ஏறினாலோ,. அளவுக்கு அதிகமாக மூச்சு வாங்கினால், உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் என்று அர்த்தம். அதோடு பதற்றம் மயக்க உணர்வு, கவனமின்மை, அளவுக்கு அதிகமான சோம்பேறித்தனம் போன்றவையும் உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியே.
