Clean Your Kidney: உங்கள் சிறுநீரகத்தை சுத்தம் செய்ய இந்த உணவுகள் போதும்!
சிறுநீரகம் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். சிறுநீரகத்தை மிக எளிதான முறையில் எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
நம் உடலில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் ஒவ்வொரு வேலையை மிகச் சிறப்பாக செய்து வருகிறது. ஆனால், நம்முடைய தவறான உணவுப் பழக்க வழக்கத்தால், உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. சரியான உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு முறையைப் பின்பற்றி வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். அதோடு, உடல் உறுப்புகள் பாதிப்படைவதையும் தவிர்க்கலாம். நம் உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றுதான் சிறுநீரகம். உங்களுடைய சிறுநீரகம் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். சிறுநீரகத்தை மிக எளிதான முறையில் எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
தண்ணீர்
தினந்தோறும் 8 கிளாஸ் தண்ணீர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடித்தாலே, உங்களுடைய சிறுநீரகம் சரியாக செயல்படுவதை உணர்ந்து கொள்ள முடியும்.
குதிரைவாலி
குதிரைவாலி, சிறுநீரகத்தில் இருக்கும் கல் மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்ய பெரிதும் உதவி புரிகிறது.
Dragon Fruit: இதய பாதிப்புகளை எளிதில் தீர்க்கும் டிராகன் பழம்!
பழங்கள்
வாழைப்பழம், வெள்ளரிக்காய், பப்பாளி, செர்ரி, நட்ஸ், உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் போன்ற பழங்களை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தை சுத்தம் செய்ய முடியும்.
மெக்னீசியம் நிறைந்த உணவுகள்
பாதாம், கீரைகள், பீன்ஸ், சோயா மற்றும் அவோகேடா, போன்ற மெக்னீசியம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகம் பலமடையும்.
மேற்சொன்ன உணவுகள் மற்றும் பழங்களை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் சிறுநீரகம் சுத்தம் அடைவதோடு, சிறுநீரகம் தொடர்பான எந்த வியாதிகளும் நம்மை நெருங்காது. இயற்கையாக கிடைக்கும் ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வது தான் மிகவும் சிறந்தது.