Asianet News TamilAsianet News Tamil

இந்த எட்டு வகையான உணவுகளை மட்டும் சர்க்கரை நோயாளிகள் எப்பவும் சாப்பிடக் கூடாது!

These eight types of desserts should never be eaten by diabetes!
These eight types of desserts should never be eaten by diabetes!
Author
First Published Jul 9, 2018, 1:26 PM IST


சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாத 8 உணவுகள்:

1.. பிட்சா 

பிட்சா மிகவும் சுவையான உணவு, இது அனைவருக்கும் பிடித்த உணவு என்றாலும் கூட, கடைகளில் கிடைக்கும் பிட்சாகளில் அதிக கலோரிகள் உள்ளன. எனவே நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுவது சிறந்தது.

2.. பிரட் மற்றும் மாவுப் பொருட்கள்:

சர்க்கரை நோயாளிகள் முதலில் கார்போஹைட்ரைட் உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். மாவினால் செய்யப்பட்ட உணவு பொருட்கள், பிரட், பாஸ்தா போன்ற உணவு வகைகளை தவிர்த்துப்பது நல்லது. இது உங்களது உடலின் குளூக்கோஸ் அளவை பாதிக்கும். ஒட்ஸ், பார்லி, பிரவுன் அரிசி போன்றவை உங்களுக்கு மிகச்சிறந்தது.

3.. பொரித்த உணவுகள் 

பொரித்த உணவுகளை சாப்பிடுவது டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நிச்சயமாக சிறந்தது அல்ல. உருளைக்கிழங்கு சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், பொரித்த கோழிக்கறி, ஆகியவற்றை கட்டாயமாக தவிர்க்க வேண்டியது அவசியம். கடைகளில் வாங்கி உண்ணும் உணவுகளினால் உங்களது உடலின் கொழுப்பு அளவு அதிகரிக்கும்.

4.. சாராயம் 

பொதுவாகவே சாராயம் உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் அதிகமாக தீங்கு விளைவிக்கக்கூடியது. நீங்கள் சாராயம் குடிப்பவர்களாக இருந்தால், உங்களது மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலான சாராயத்தை அருந்தலாம்.

5.. கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்: 

கொழுப்புள்ள பால் பொருட்கள், வெண்ணெய், ஐஸ் க்ரீம், முழுமையான கொழுப்பு கொண்ட யோகார்ட், கொழுப்பு கொண்ட தயிர் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. நீங்கள் பால் பொருட்களை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் கூட சிறந்தது தான்.

6.. கொழுப்புள்ள மாமிசம் 

மாமிசத்தில் உள்ள கொழுப்புகள் உங்களது உடலின் கொழுப்பு அளவை அதிகரிக்கின்றன. இவை சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதில் இதய பாதிப்புகள் வரவும் காரணமாக இருக்கின்றன. நீங்கள் மீன் போன்ற கொழுப்பு இல்லாத மாமிசங்களை சாப்பிடலாம்.

7.. ஜூஸ்கள் 

சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிடுவது சிறந்தது தான். ஆனால் ஜூஸ் பருகுவதற்கு முன்னால் அதில் அடங்கியுள்ள சோடா, சர்க்கரை ஆகியவற்றின் அளவுகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

8.. வாழைப்பழம் மற்றும் தர்பூசணி 

வாழைப்பழம் மற்றும் தர்பூசணி ஆகியவை சத்தானவை தான் என்றாலும், இதனை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது

Follow Us:
Download App:
  • android
  • ios