There is no need for Vyakara to increase the mood. These natural foods are just enough ...

ஆண்மையை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்

ஆண்மை என்றதும், ஆண்மகன்களின் மனதில் நிற்பது வயாகரா போன்றவைதான். ஆனால் இயற்கையிலேயே ஆண்மையை அதிகரிக்கக் கூடிய உணவுகள் எவ்வளவோ உள்ளன.

** தர்பூசணி

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தர்பூசணிப் பழங்கள் பாலுணர்வைத் தூண்டுவதில் வயாகராவைப் போன்று சக்தி வாய்ந்தவை எனத் தெரிவித்துள்ளது. தர்பூசணி பழத்தின் தோல் பகுதிக்கு மேலுள்ள வெள்ளை நிறப்பகுதி சிட்ரூலைன் என்ற வேதிப்பொருளைக் கொண்டுள்ளது. இது உடம்பில் அர்ஜினைன் மற்றும் நைட்ரிக் அமிலங்களை சுரக்கச் செய்கிறது. நைட்ரிக் அமிலம் ஆண்களில் பாலுணர்வைத் தூண்டவும், விறைப்புத் தன்மையை அதிகரிக்கவும் உதவும் பொருட்களில் ஒன்று என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

** வால்நட்

வால்நட்ஸ்கள் விறைப்புத்தன்மைக்குப் பெயர் போனவை. இவற்றில் ஒமேகா-3 அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி3 நிறைந்துள்ளது. இது விந்தணுவின் தரத்தை உறுதிசெய்வதுடன் ஆணின் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.

** முட்டை

நல்ல விறைப்புத்தன்மைக்கு முட்டைகள் சிறந்த ஒரு தீர்வு. இதில் உள்ள வைட்டமின் டி, பி5 மற்றும் பி6 ஆகியவை பாலுணர்வை மிகச்சிறந்த வகையில் தூண்டுவதுடன் ரத்த நாளங்களை ஆசுவாசப்படுத்தவும் செய்து உங்கள் துணையுடன் நீங்கள் இணையும் நேரத்தை மிகவும் மகிழ்வுறச்செய்கிறது.

** பசலைக்கீரை

உலகின் மிகச்சிறந்த உணவாகக் கருதப்படும் இந்த கீரை பல்வேறு வைட்டமின் சத்துக்களைக் கொண்டுள்ளதுடன் வயாகராவைப் போன்று செயல்படவும் செய்யும். இதிலுள்ள இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை இந்த உணவை இயற்கை வயாகராவாக ஆக்கியுள்ளது.

** டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட் எனப்படும் கருப்பு சாக்லெட் மன அழுத்தத்தைக் குறைத்து உணர்வினை ஊக்குவிக்கிறது. இது நல்ல உணர்வுகளைத் தருவதுடன் உணர்ச்சிகளையும் அதிகரிக்கவல்லது.

** வாழைப்பழம்

வாழைப்பழங்களில் இயற்கையாகவே காணப்படும் ப்ரோமலைன் எனப்படும் வேதிப்பொருள் ஒருவருடைய பாலுணர்வைத் தூண்டக்கூடியது. இதில் மேலும் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பாலுணர்விற்கு உதவும் உடலுக்கு நன்மை பயக்கும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. 

** அவகேடோ 

இந்தப் பழங்கள் பல்வேறு சத்துக்கள் கொண்ட உணவுகளில் முன்னணியில் உள்ளது. இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து, வைட்டமின் பி6 உள்ளிட்ட மேலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளதால் நல்ல சக்தியை அளிக்கிறது. ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த சத்துக்கள் உதவுகின்றன.

** ஏலக்காய்

ஏலக்காயும் பாலுணர்வு ஊக்க உணவுகளின் பட்டியலில் முதலில் உள்ளது. இதில் உள்ள சினியோல் எனப்படும் பொருள் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். விறைப்புத்தன்மையை அதிகரிக்க மிகவும் சிறந்த உணவுப்பொருள் இந்த ஏலக்காய். மாதுளை மாதுளம் பழம் வயாகரா போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளதுடன் பல்வேறு ஆரோக்கியமான சத்துக்களையும் கொண்டுள்ளது.

** மாதுளம் பழம்

இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடன், இரத்தத்தை பிறப்புறுப்புகளை நோக்கிப் பாயச்செய்யும். வியர்த்து விறுவிறுக்க வைக்கும் அந்த இனிமையான தருணங்களுக்கு இந்த பழம் ஏற்றது.