Asianet News TamilAsianet News Tamil

உடை எடையை குறைக்க சொல்லப்படும் 5 கட்டுக்கதைகள்..!!

கலோரிகள் குறைந்த உணவை சாப்பிடுவது முகவும் முக்கியமானது. அதேசமயத்தில் உடல் எடை குறைவதற்கான முயற்சியில் உள்ளவர்கள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
 

the Myths about weight loss
Author
First Published Feb 9, 2023, 11:28 AM IST

இந்தியாவில் உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கான வழிகள் பலருக்கும் தெரிந்திருந்தாலும், ஆனால் முயற்சி எடுக்க மறுக்கின்றனர். எனினும் அவர்களுக்கு ஊக்கம் கிடைக்கும் நோக்கில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பொதுவாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள பொருட்களுக்கு முன்னுரிமை கொடுத்து சாப்பிட வேண்டும். அதேசமயத்தில் எடை இழப்பு பயணத்தில் புரதத்துக்கு முன்னுரிமை தருவதும் முக்கியமாகும். இதனுடன் உடல் எடையை குறைக்க விரும்புவோர் குறைந்தளவு கலோரிகள் கொண்ட உணவை தான் சாப்பிட வேண்டும். இதுதவிர உடல் உழைப்பு சார்ந்த செயல்பாடுகளை கொண்டிருப்பது அவசியம். 

புரதம் முக்கியம்

நுண்ணூட்டச்சத்துக்களை கணக்கில் கொண்டு தான் சாப்பாட்டை சாப்பிட வேண்டும். அதனால் நீங்கள் எடை இழப்புக்கு வேண்டி சாப்பிடும் உணவில் புரதம் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். அப்போது தான் உடல் புத்துணர்ச்சியோடு இருக்கும். அதேசமயத்தில் புரதம் சாப்பிடுவதில் அளவு தேவை. அதை அதிகளவு உட்கொண்டால் சருமத்தில் வறட்சி நிலவும். அதை தவிர்க்க காலை உணவிலேயே போதுமான புரதத்தை எடுத்துக்கொள்வது நல்லது.

சரியாக உணவு சாப்பிட வேண்டும்

எடையை விரைவாக குறைப்பதற்கு பட்டினி உதவும் என்கிற கருத்து பலரிடையே நிலவுகிறது. ஆனால் உண்மையில் எடை இழப்புக்கு அது பலன் தராது. உணவுக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது மட்டுமே அதற்கான சரியான வழிமுறையாகும். பட்டினிக்கு பிறகு சாப்பிட்டா, அதிகமாக சாப்பிடத் துவங்கிவிடுவோம். இதனால் சாப்பாட்டின் அளவு வழக்கமான நிலைக்கு வந்துவிடும். சீரான இடைவெளியில் உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றி, உணவு சாப்பிடுவது நல்ல தீர்வை வழங்கும். அவ்வப்போது ஒரு குவளையின் தண்ணீர் அருந்திடுங்கள். இதனால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் வராது.

சூரியன் இருக்கும் வரை தான் எல்லாம்

சூரியன் உதிக்கும் போது எழுந்து, சூரியன் மறைவதற்குள், அன்றைய நாளுக்குரிய உணவுகளை சாப்பிட்டு விட வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு சாப்பிடுவது, கலோரிகள் அதிகரித்து உடல் எடை கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவேளை நீங்கள் தினசரி குறைந்தளவு கலோரிகள் கொண்ட உணவை சாப்பிடுகிறீர்கள் என்றால், சூரியன் மறைந்த பிறகு சாப்பிடலாம். அதில் எந்த தீங்கும் இல்லை. ஆனால் உடல் எடை அதிகரித்து காணப்படுபவர்கள், உறக்கத்துக்கு  முன்பு குறைந்தது 3 மணி நேரம் நாம் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என மருத்துவ ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மாத்திரை, டானிக் வழியே உடல் எடை குறைக்கலாம்

அதிகளவு உடலுழைப்பு இல்லாதவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு வேண்டிய சந்தைகளில் மாத்திரை, டானிக் மற்றும் பவுடர் போன்றவை கிடைக்கின்றன. அவற்றின் மூலம் நல்ல முடிவுகள் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் மருத்துவகளின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட மருந்து மாத்திரைகளை சாப்பிடலாம். இதை சாப்பிடும் போது முறையான தூக்கம், அதிக உடல் சார்ந் வேலைகளில் ஈடுபடுவது போன்றவை விரைவாக உங்களுடைய உடல் எடையை குறைத்துவிடும்.

பானங்களில் கிடைக்கும் பலன்கள்

உடல் எடையை குறைப்பதற்கு டீடாக்ஸ் என்கிற பானங்கள் பெரியளவில் உதவுகின்றன. நம் உடலில் சேரும் நச்சுக்கழிவுக இது அகற்றிவிடும் என மருத்து ஆதாரங்கள் கூறூகின்றன. மேலும் டீகாஸ் பானம் உடலுக்கு வேண்டிய ஓய்வினை வழங்குகிறது, ஆனால் இதனால் உடலிலுள்ள கொழுப்புகள் குறையாது. அதற்கு டீடாக்ஸ் பானங்களுடன் முறையான உடற்பயிற்சிகளும் உணவுப் பழக்கங்களும் அவசியமாகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios