The food for the rhizocode is the curry powder idli

ரத்தசோகை உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு கறிவேப்பிலை இட்லி ஆகும். உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கும் கறிவேப்பிலை இட்லியை அனைவருமே காலை, இரவு வேளைகளில் சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து நிறைந்த கறிவேப்பிலை இட்லி செய்ய தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலைப் பொடி – 1 ஸ்பூன்,

இட்லிப் பொடி – 1 ஸ்பூன்,

இட்லி – 20,

நல்லெண்ணெய், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:

* கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு இட்லிப் பொடி, கறிவேப்பிலைப் பொடி சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

* அடுத்து அதில் இட்லித் துண்டுகள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடி மசாலாவுடன் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

* சூப்பரான சத்தான கறிவேப்பிலை இட்லி ரெடி.

* இட்லியுடன் சாம்பார், சட்னி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

பயன்கள்

கறிவேப்பிலை சாப்பிடுவதால் முடி வளரும், வெண்மை நீங்கும்.

ரத்த சோகை தீரும்.

நன்கு பசி எடுக்கும்.