Asianet News TamilAsianet News Tamil

உதட்டின் நிறத்தை வைத்தே உடலின் ஆரோக்கியத்தை அறியலாம். எப்படி?

The color of the lip can be found in the body health. How?
The color of the lip can be found in the body health. How?
Author
First Published Mar 13, 2018, 1:27 PM IST


உதட்டின் நிறத்தை வைத்தே உடலின் ஆரோக்கியத்தை அறியலாம்...

ஒருவருடைய உதட்டின் நிறத்தை வைத்தே அவர்களின் ஆரோக்கியத்தின் அளவை கண்டுபிடிக்க முடியும்.

** சிவப்பு நிற உதடு

உதடு பிரகாசமாக நல்ல சிவப்பு சிறத்தில் இருந்தால், அதற்கு அவர்களின் உடலில் அதிகப்படியான உஷ்ணம், கல்லீரம் மற்றும் மண்ணீரல் பிரச்சனை இருப்பதாக அர்த்தமாகும். இந்த பிரச்சனையை போக்க இவர்கள் செவ்வந்தி பூ கலந்த தேனீர், கசப்பான முலாம் பழம் போன்றவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லது

** சாம்பல் நிற உதடு

ஒருவருடைய உதடு மங்கலான இளம் சிவப்பு, வெள்ளை, சாம்பல் போன்ற நிறத்தில் இருந்தால், அதற்கு அதிக குளிர்ச்சி, ரத்த சோகை குறைவு போன்ற பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தமாகும். 

தீர்வு

இந்த பிரச்சனையை போக்க இவர்கள் நல்ல சூடான உணவை சாப்பிட வேண்டும். மேலும் விட்டமின் C மற்றும் இரும்பு சத்து கொண்ட பேரிச்சம்பழம், சிவப்பு இறைச்சிகள் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

** கருப்பு நிற உதடு

ஒருவருடைய உதடு கருப்பாக இருந்தால், அதற்கு அவர்கள் உடலின் செரிமான அமைப்பில் பிரச்சனை இருப்பதாக அர்த்தமாகும். 

தீர்வு

இந்த பிரச்சனையை போக்க இவர்கள் சூடான தண்ணீரை அடிக்கடி குடிப்பதுடன், நார்ச்சத்து மிக்க உணவுகள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

** ஊதா நிற உதடு

ஒருவருடைய உதடு நல்ல சிவப்பாகவும் அல்லது ஊதா நிறத்தில் கோட்டுடன் இருந்தால். அதற்கு அவர்களின் உடல் சம நிலையில் இல்லை என்று அர்த்தமாகும்.

தீர்வு

இந்தப் பிரச்சனையை போக்க இவர்கள் பதப்படுத்திய உணவுகளை தவிர்த்து, உருளைகிழங்கு, கேரட், மீன்கள் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios