முகத்தின் நரம்புகளை பாதிக்கும் ஒரு வித நரம்பியல் நோய் தான் இந்த ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் நோய். பிரபல ஹாலிவுட் ராப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கும் இந்த நோய் தாக்கியுள்ளது. இதனால் தற்போது அவரது முகத்தின் ஒரு பகுதி செயலிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து இதில் கணலாம். 

ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் என்பது ஒருவகை நரம்பியல் செயலிழப்பு நோய். காதுகளுக்கு அருகில் உள்ள முக நரம்புகளை பாதிக்கும் இந்த நோய், முகத்தின் ஒரு பகுதியினை செயலிழக்கச்செய்யும் தன்மை கொண்டது.

எப்படி பாதிக்கிறது

சின்னம்மைக்கு காரணமான வைரஸ்தான் இந்த 'ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம்' தொற்றுக்கும் காரணமாகிறது. சின்னம்மை நீங்கிய பின்னரும், உடல் நரம்புகளில் தங்கிவிடும் இந்த வைரஸ்கள் ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம்க்கு காரணமாகிறது.

யாரை அதிகம் பாதிக்கும்

சின்னம்மை வந்தவர்களை பாதிக்கும் இந்த தொற்று, 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் தாக்குகிறது. குழந்தைகளிடம் இந்த பாதிப்பு மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

காதை சுற்றி கொப்புளங்கள்

காது மற்றும் அப்பகுதியைச் சுற்றிலும் நீர் கொப்புளங்கள் மற்றும் அதீத வலியுடன கூடிய சொறி, சிவத்தல் தென்பட்டால் இது ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

ஒரு பக்க செயலிழப்பு

முகத்தின் ஒரு பாதியில் உள்ள உறுப்புகள் செயலிழந்து, பாதிக்கப்பட்ட நபரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கும் நிலை இந்த அரிய வகை நோயின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

செவி காளாமை

இந்த அரிய வகை கொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அதீத காது வலி மற்றும் செவி கேளாமை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதேநேரம், நா வறட்சி மற்றும் சுவை இழப்பு, போன்ற பிரச்சனைகளையும் சந்திக்கின்றனர்.

கண்களை பாதிக்கும்

ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண் இமை மூடுவதில் சிரமதை்தை எதிரகொள்கின்றனர். மேவும், இந்த கண்களில் வழி மற்றும் மந்தமான கண் பார்வை போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர்.

தூக்கம் கெடுக்கும் குறட்டை பிரச்சனைக்கு தீர்வு...நிபுணர்களின் சூப்பர் அட்வைஸ்..

பேச்சில் தடுமாற்றம்

முகத்தில் உள்ள நரம்புகளை பாதிக்கும் இந்த தொற்று, நா வறட்சியுடன் வாயின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இதன் காரணமாக பேதிக்கப்பட்ட நபர்கள் பேச முயற்சிக்கும் வார்த்தைகள் முழுமையாக வெளி வருவதில்லை.

தடுக்கும் வழி

சின்னம்மை தொற்று வந்தவர்களுக்கு இந்த ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் வரும் என்பதல், குழந்தைகளுக்கு சிறு வயதில் சின்னம்மை தடுப்பூசி போடுவது இந்த சின்னம்மை மற்றும் 'ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம்' ஆகிய இரண்டையும் தடுக்க உதவும்

முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்தது... பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு என்ன ஆச்சு?