தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உடையவரா?..அப்போ கண்டிப்பா இதை படிங்க..!

சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உண்டு. அது ஏன் நடக்கிறது. கனவு உலகத்தில் நடக்கிறார்களா? அல்லது வேறு ஒரு காரணம் உண்டா? என்பதை இங்கு காணலாம்.

sleepwalking symptoms and causes

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தூக்கம் மிகவும் அவசியம். உடல் ஆரோக்கியமாக இருக்க ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும். நல்ல தூக்கம் உடலுக்கு ஓய்வையும், மூளையைச் சுறுசுறுப்பாகவும் வைக்கிறது. உடலில் ஏற்படும் இதய நோய்,  சர்க்கரை நோய்,   இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தூக்கமின்மையை காரணமாகும்.

தூக்கத்தில் எழுந்து நடக்கும் வியாதியை சோம்னாம்புனலிசம் என்று கூறுகிறோம். சோம்னாம்புனலிசம் என்பது நோய் அல்ல.ஒரு நோயின் வெளிப்பாடு ஆகும். இது மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் மாத்திரைகளால் ஏற்படும்  பக்க விளைவுகளை உண்டானது.

ஒரு நபர் தூங்காமல் இருந்தால் தூக்கத்தில் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. தூக்கத்தில் நடப்பதை பரம்பரை குணம் என்றும் கூறுவர்.

இந்த வியாதி ஏற்படுவதற்கான காரணங்கள்:

1. பரம்பரை ( குடும்பங்களில் நிகழலாம்).
2. தூக்கமின்மை அல்லது சோர்வு.
3. தூக்கத்தில் மூச்சுத்திணறல் .
4. தூக்க சூழலில் ஏற்படும் மாற்றம்.
5. உடல் நலமின்மை.
6. தூக்க மாத்திரைகள் போன்ற சில மருந்துகளை உபயோகித்தல்.
7. மன அழுத்தம், கவலை.
8. அடிக்கடி தூக்கம் தடைபடுதல்.
9. முழு சிறுநீர்ப்பைடன் படுக்கைக்கு செல்வது.
10. ஒற்றை தலைவலி, பக்கவாதம், காய்ச்சல்.

போன்றவை தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு காரணங்களாக இருக்கலாம்.

இதையும் படிங்க: கோடையில் நல்லெண்ணெய் குளியல்..! இவ்வளவு நன்மைகள் இருக்கா?

ஒருவர் தூக்கத்தில் நடந்தால் அவர் செய்யும் செயல் அவருக்கு தெரியாது. உங்களுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மேலும் அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றால் மிகவும் நல்லது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios