1. ரோஜா இதழ்களில் உள்ள துவர்ப்புச் சுவை, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். ரோஜாப் பூவினால் தயாரிக்கப்படும் ‘குல்கந்து’ மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்தது.
  2. உஷ்ணம் காரணமாக ஏற்படும் வயிற்றுவலி நீங்க இது உதவும். ரோஜா இதழில் தயாராகும் பன்னீர், மயக்கத்தையும், மனக் கவலையையும் போக்கும்.
  3. ரோஜாப் பூவைக் கொண்டு தயார் செய்யப்படும் இனிய சுவையுள்ள சர்பத், ரத்த விருத்திக்கு பயனுள்ள ஒரு டானிக் ஆகும். இந்த ரோஜாப் பூ சர்பத் உடல் உஷ்ணத்தை எப்போதும் நீக்கி புதிய உற்சாகத்தை அளிக்கும்.
  4. ரோஜாவில் சர்க்கரை, துவர்ப்பு, வைட்டமின் சி ஆகியவை அதிகம் உள்ளன. ரோஜா எண்ணெய் புண்களை ஆற்றும். காதுவலி மற்றும் பல் ஈறுகளில் ஏற்படும் புண்ணுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
  5. ரோஜா இதழ்களை தேவையான அளவு சேகரித்து சம அளவு பாசிப்பயறு சேர்த்து நாலைந்து பூலாங்கிழங்கையும்  உடன் வைத்து விழுதாக அரைத்து அதை உடல் முழுவதும் தேய்த்து சிறிதுநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தேய்த்துக் குளித்தால் உடல் கவர்ச்சிகரமான நிறம் பெரும். சரும நோய்கள் நீங்கும்.
  6. , தினமும் குளிக்கும்போது சோப்புக்கு பதில் பயன்படுத்தலாம். ரோஜாவினால் தயாரிக்கப்படும் கஷயமானது வாதம், பித்தத்தை அகற்றும் தன்மை உடையது.