Remedy for themal
தேமல்
சருமத்தில் உண்டாகும் நிறமாற்றத்தால் ஏற்படுவதுதான் தேமல்.
தேமலை மறையச் செய்ய பல ஆங்கில மருந்துகள் இருந்தாலும் அவற்றால் பக்க விளைவுகள் இருக்கும்.
தேமலை மறையச் செய்ய சித்த வைத்தியத்தில் அற்புத குறிப்புகள் உண்டு. பலனும் அதிகம். விலையும் மலிவானது. பக்க விளைவுகளும் இல்லை.
அசிங்கமாக தெரியும் தேமலை மறையச் செய்ய சித்த மருத்துவ தீர்வு..
தேவையானவை:
அரிதாரம் – 1 கட்டி கோவைக்காய் சாறு- சிறிதளவு
அரிதாரம் என்று பளிங்கு போன்ற கட்டி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இது கட்டியாகவும் கிடைக்கும். தூளாகவும் இருக்கும்.
செய்முறை:
கட்டியாக இருப்பதை அரை கட்டி எடுத்து அதனுடன் சிறிது கோவைக்காய் சாறு விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையை தேமல் இருக்கும் இடத்தில் காலை மாலை என பூசி வந்தால் 10 நாட்களில் தேமல் மறைந்துவிடும்
