Asianet News TamilAsianet News Tamil

பெண் குழந்தைகள் சீக்கிரம் பூப்படைய, பிளாஸ்டிக்தான் காரணம்! இதை வாசிங்க தெரியும்…

Puppataiya female children as soon as possible because plastic bottles Vacinka I know
puppataiya female-children-as-soon-as-possible-because
Author
First Published Apr 14, 2017, 1:47 PM IST


பள்ளிச் சிறுமிகள் இப்போதெல்லாம் பத்துப் பதினொரு வயதுகளிலேயே வெகு விரைவாகப் பூப்படைவது இன்றைய இளம் அம்மாக்களை கவலை கொள்ளச் செய்யும் விஷயங்களில் ஒன்று.

ஏன் இப்படி ஆகிறது?!

குடும்ப வாகு, மரபியல் காரணங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் இவையெல்லாம் தாண்டி இந்த விஷயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பூதம் ஒளிந்து கொண்டு சமீப காலங்களாக பெண் குழந்தைகளைப் பெற்ற அம்மாக்கள் எல்லோரையும் அச்சுறுத்தி வருகிறது.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நேர்ந்தாலும் சரி அல்லது குழந்தைக்குப் தாய்ப்பால் போதவில்லை என்றாலும் சரி சிலர் குழந்தை பிறந்த அன்றே கூட தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட ஃபீடிங் பாட்டில்கள் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.

மகப்பேறு மருத்துவர்கள் பலர் இதை அனுமதிப்பதில்லை. ஆனாலும் குழந்தை பசியால் அழுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் இப்படிச் செய்ய நேர்கிறது.

குழந்தையின் பசி தீர்ப்பதில் தவறுகள் இல்லை. ஆனால் பயன்படுத்தப்படும் பொருளில் தான் பெரும் ஆபத்து ஒளிந்திருக்கிறது.

பிறந்த குழந்தைகளின் ஃபீடிங் பாட்டில்கள் மட்டும்தான் என்றில்லை. பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்கள், ட்ரான்ஸ்பரன்ட் ஸ்நாக்ஸ் டப்பாக்கள் இவை எல்லாமும் தயாரிக்கப் பயன்படும் பிளாஸ்டிக்குகள் பாலி கார்பனேட் பிளாஸ்டிக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் குகளில் இருக்கும் பிஸ்ஃபீனால்கி எனும் மூலக்கூறு ஃபீடிங் பாட்டில்கள் மூலம் குழந்தைகளின் உடலுக்குள் ஊடுருவி ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பை அதிக மாக்குகிறது.

இதே மூலக்கூறு ஆண் குழந்தைகளின் உடலுக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா?

ஆண் குழந்தைகள் வளர வளர அவர்களது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது.

வழக்கத்தை விட ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாவதால் தான் இன்றைக்குப் பெண் குழந்தைகள் பத்து, பதினொரு வயதுகளிலேயே தங்களது விளையாட்டுப் பருவத்தை, பேதைமையை தொலைத்து அதிவேகமாக பூப்படைந்து விடுகிறார்கள்.

அதற்கு காரணம் உள்ளிருந்து மிரட்டும் இந்த பிஸ்ஃபீனால்கி தான் என்பது பொதுமக்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக இந்த இதழில் காண்போமா!

குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக் கான உபயோகப் பொருட்களில் இந்த பாலிகார்போனேட் பிளாஸ்டிக்குகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஏனெனில்; மிகவும் லேசானது, எடையற்றது. தரமான பிளாஸ்டிக், உறுதியானது; தோற்றத்தில் துல்லியமான கண்ணாடி போன்றது; ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது மின்சாரமோ, வெப்பமோ தாக்க இயலாதது; போன்ற லாபகரமான பிரதான காரணங்கள் இருக்கையில் இந்தப் பிளாஸ்டிக்குகளை தயாரிப்பாளர்களும் சரி நுகர்வோர்களும் சரி எப்படி தவிர்ப்பார்கள்?

பாலி கார்பனேட் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் வேறு பொருட்கள்

வீடியோ சி.டி.க்கள், டி.வி.டி.க்கள், எலக்ட்ரானிக் கருவிகள், ஆட்டோமேடிக் விளையாட்டுப் பொருட்கள், விளையாட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு சாதனங்கள், மருத்துவ சாதனங்கள் இன்னும் பல…

இதன் நீடித்த உழைப்பு; உடையாத் தன்மை; வெப்பம் தாங்கும் தன்மையினால் இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருட்கள் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

பிஸ்ஃபீனால் (கி) என்றால் என்ன?

பிஸ்ஃபீனால் கி என்பது பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கின் மிக முக்கியமான கட்டுமானப் பொருள். இது ஒரு வேதிப்பொருள், இதன் பெயர் 22 பிஸ் 4 ஹைட்ராக்சி ஃபினைல் ப்ரோபேன் (22 Bis4 Hydroxy pheyl propae).

பாலி கார்பனேட் பிளாஸ்டிக்கின் பிஸ் பினால்கி மிக மிக குறைந்த அளவில் நழுவி கரைந்து அது வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் குளிர் பானங்களில் ஊடுருவி நிற்கிறது என்று உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வறிக்கைகளும் ஆராய்ச்சி முடிவுகளும் தகவல் தெரிவிக்கின்றன.

அப்படி உணவுப் பொருட்களில் கரைந்து ஊடுருவி நிற்கும் பிஸ்ஃபீனால் எவ்வளவு தெரியுமா?

0.000000005 (5/100000000) மில்லிகிராம் அளவுதான். ஒருநாளில் நம் எடையின் ஒரு கிலோவுக்கு 0.0000125 மில்லி கிராம் அளவு.

அதுக்கே இப்படி?

Follow Us:
Download App:
  • android
  • ios