Asianet News TamilAsianet News Tamil

உடலில் ரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு அன்னாசி பழம் ஒரு டானிக்…

Pineapple fruit is a tonic for those who have less blood in the body ...
pineapple fruit-is-a-tonic-for-those-who-have-less-bloo
Author
First Published May 2, 2017, 1:42 PM IST


அன்னாசி பழத்தில் வைட்டமின் - பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது.

இது உடலில் ரத்தத்தை விருத்தி செய்யவும், உடலுக்கு பலத்தை தரவும் வல்லது.

பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் அன்னாசி இருக்கிறது.

தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்துக் கொள்ளவும்.

படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து விடவும்.

பின் படுக்கச் செல்லும்போது ஊறிய வற்றல்களை சாப்பிட வேண்டும். இப்படி 40 நாட்கள் சாப்பிட்டால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும்.

அன்னாசி பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios