100 கிராம் அன்னாசி பழத்தில் உள்ள சத்துக்கள்:

நீர்=86%

மாவுப்பொருள்=12%

புரதம்=0.6%

கொழுப்பு=0.1%

கால்சியம்=0.12%

பாஸ்பரஸ்=0.01%

இரும்புத்தாது=0.9 யூனிட்

வைட்டமின் C=60 யூனிட்

வைட்டமின் A=60 யூனிட்

வைட்டமின் B2=120 யூனிட்

அன்னாசியில் உள்ள மருத்துவக் குணங்கள்:

** உடனடி சக்தி, தெம்பு, புத்துணர்ச்சி தருவது அன்னாசிப் பழச்சாறு. குரல் வளத்தை மேம்படுத்தும். தொண்டை வலி நீக்கும். சளி,இருமல், மூச்சுப் பிணிகள் விலகும்.

** ஜீரணம் மேம்படும். மலச்சிக்கல் விலகும். இதில் மிகுந்துள்ள குளோரினால் நச்சுப்பொருட்கள் விரைவில் வெளியேறி சிறுநீரகம் பாதுகாப்பும், ஓய்வும் பெறுகின்றது.

** காய்ச்சல், மஞ்சள்காமாலை போன்றவற்றை குறைக்கும் உன்னதமான பழச்சாறு மிக்கது அன்னாசி.

** அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.

** தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். இது இனிப்பு சுவையுடன் சுறுசுறு தன்மையுடன் இருக்கும். இதன் இதழ்கள் அனைத்தும் நட்சத்திரம்போல் 8 வால்களுடன் காணப்படும். இதனுள் விதை இருக்கும்.

** சிலர் பசியின்றி அவதிப்படுவார்கள். சாப்பிட தோணவில்லை என்பார்கள். மிகக் குறைந்த அளவு உணவைக்கூட கடமைக்கு சாப்பிடுவதுபோல் சாப்பிடுவார்கள். இத்தகைய பசியின்மைக்குக் காரணம் வாயுக் கோளாறுகளே. இந்த வாயுவுக்களின் சீற்றத்தால் வயிற்றுப் பகுதியில் ஒருவித மந்தத் தன்மை ஏற்படுகிறது. இந்த நிலை மாறி நன்கு பசியைத் தூண்ட தினமும் உணவில் அன்னாசிப் பூவை சேர்த்துக் கொண்டால் வாயுக்களின் சீற்றத்தைக் குறைத்து நன்கு பசியைத் தூண்டும்.

** சிலருக்கு எத்தகைய மென்மையான உணவுகளை உட்கொண்டாலும் செரிமானம் ஆகாது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் இத்தகைய தொந்தரவுகள் வருவதுண்டு. இதனால் புளித்த ஏப்பம், உருவாகும். மலச்சிக்கல், வயிற்றுப்புண், மூலநோய்கள் உண்டாகக் கூட வாய்ப்புண்டு.

இந்த தொந்தரவு உள்ளவர்கள் எத்தகைய உணவை சமைக்கும்போதும், அதில் சிறிது அன்னாசிப் பூவை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும். குடலின் உட்புறச் சுவர்கள் பலப்படும்.