உணவை  தவிர்த்தல் 

உடல் எடையை தவிர்க்க நம் அனைவரும் கையாளும் ஒரே வழி உணவுகளை தவிர்ப்பதாகும். ஆனால், இது உடலுக்கு மிக மோசமான விளைவுகளை தரவள்ளது. மேலும் உணவுகளை தவிர்த்துக்கொண்டே வந்தால் காலப்போக்கில் வளர் சிதை மாற்றம் அடைந்து உடல் எடையை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

கடுமையாக விரதம் இருந்தால் உடல் எடை குறையலாம். ஆனால், நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இழக்கும் எடை விலைமதிப்பற்ற தசைகளையும், வளர்ச்சிதை மாற்றத்தையும்  குறைக்கிறது.

இதனால்  வளர்ச்சிதை மாற்ற  நோய்கள்  மற்றும்  நீரழிவு   ஆபத்துகள்  வர  வல்லது.

குறைந்த   கலோரி  உணவுகள்

நம்  உடலுக்கு  கொழுப்புகள்  மிக  முக்கியம். ஆரோக்கியமான கொழுப்புகள், கொழுப்பை எரிக்க உதவுகிறது. குறைந்த கலோரி உணவுகளை எடுப்பதால் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும்  தாதுக்கள்   நமக்கு  சரிவர  கிடைப்பதில்லை. இதனால் உடல் எடையை மட்டும் குறைக்காமல் நாம் பல்வேறு நோய்களையும் வரம் பெற்று வாங்கிக் கொள்கிறோம்.

மருத்துவ  மேற்பார்வைப்படி  ஒரு  நாளைக்கு  1,200 கலோரிகள்   எடுக்க வேண்டும் . அவ்வாறு  எடுப்பதனால்  ஆரோக்கியமான எடையோடு   நோயற்று  வாழலாம் .

மருந்துகள்   மற்றும்  மாத்திரைகள் 

எடை  இழப்புக்கான  மாயமான    மாத்திரைகள்  எதுவும்  இல்லை. ஆனால் துரதிருஷ்டவசமான, கோகைன்  போன்ற   மருந்துகள் விரைவான  ஆற்றல்  தருகின்றது.

மேலும்  அது   இதயத்தையும் , மூளையையும்  கடுமையாக  பாதிக்கின்றது . மேலும் மலச்சிக்கலையும்  உண்டுபடுத்தும் .இதை தவிர்த்து  மேலும், பல்வேறு பாதிப்புகளையும்  வழங்கவள்ளது.

நீங்கள்   மருந்துகளை   எடுத்துக்கொள்ளும் நபராக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் அதன் பக்கவிளைவுகளையும் கேட்டுக்கொள்வது நல்லது.

ஆரோக்கியமற்ற   மற்றும்  சமநிலையற்ற  உணவு   மூலம்  விரைவான  எடை  இழப்பாகும்.எந்தவித  உடற்பயிற்சியும்  இல்லாமல்  இது எடையை  குறைக்க  வல்லது. ஆனால், இது  நமது   உடலில்  இருக்கும்  நீரினை  குறைக்கிறது .

அதிக    உடற்பயிற்சி 

ஊட்டச்சத்து  குறைவாக  உள்ளவர்கள்  , உடல் எடையை குறைக்க தீவிரமாக  உடற்பற்சி  மேற்கொண்டால்  அது  பல  மோசமான விளைவுகளை   தரவல்லது . இதனால்  நீர்ப்போக்கு  மற்றும்  *Electrolyte Imbalance*  போன்றவை  ஏற்படும். உடல் எடையை  இழக்க வேண்டியது   அவசியம். ஆனால் அது ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம்  மேற்கொள்ள  வேண்டும்.

அறுவை  சிகிச்சை

இது, கடைசியான  வழி, உடல்  எடை  குறைக்க  பல்வேறு வழிகள் தோற்றுபோனாலும் அறுவை சிகிச்சை  எடையை  குறைக்கலாம். ஆனால் இது பல்வேறு பக்கவிளைவுகளை தரவல்லது.

உடல்  இழப்பு   என்பது  ஆரோக்கியமான  எடையை  தக்கவைப்பதே  ஆகும். நாம் வாழும்  வாழ்க்கைக்கு  ஏற்ப  நமது  உணவு முறைகளை   தேர்ந்தெடுக்கவேண்டும் . மேலும்  ஆரோக்கியமான  உணவு, மற்றும் ஆரோக்கியமான உடற்பயிற்சியை நோயில்லாத வாழக்கைக்கு வழிசெய்யும்.