தூக்க குறைபாடு

தூக்கக் குறைபாடு எல்லா யாரை வேண்டுமென்றாலும் பாதிக்கும். அதாவது நான்கு ஆண்களில் ஒருவருக்கும், 9 பெண்களில் ஒருவருக்கும் குறட்டை, தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட தூக்கக் குறைபாடுகள் உள்ளன என்று ஆய்வுகள் சொல்கின்றனர்.

உடலுக்கும், மனதுக்கும் ஓய்வை அளிப்பது தூக்கம் மட்டுமே. நன்கு ஆழ்ந்து தூங்கி விழித்துக் கொள்பவர்கள் மிக உற்சாகமாகச் செயல்படுவார்கள். முறையான தூக்கம் உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்துக்கு செலவழிக்கிறான். ஆனால் அந்த அவசரக் காலத்தில் தூக்கத்தின் அளவு குறைந்து கொண்டே போகிறது.

தூக்கத்தின் மூன்று நிலைகள்: 

தூக்க குறைபாட்டை ஆரம்ப நிலை, இடைநிலை, இறுதி நிலை என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

இரவில் நெடுநேரம் விழித்திருந்து தாமதமாகத் தூங்குபவர்கள் ஆரம்ப நிலை, சரியான நேரத்தில் தூங்கி விட்டு நள்ளிரவில் தூக்கம் வராமல் இருப்பவர்கள் இடைநிலை, இரவு தூங்கிவிட்டு அதிகாலை நேரத்தில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இறுதி நிலை.

குறைவான தூக்கம், அதிகத் தூக்கம், ஆழ்ந்து உறங்காமல் இருப்பது மூன்றுமே தூக்கக் குறைபாடுகளின் வகைகள் ஆகும்.

தூக்கம் வராமல் இருக்க காரணம் 

தூக்கம் வராமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் மன அழுத்தம், மன உளைச்சல் ஆகும். போதை மருந்து உட்கொள்பவர்களுக்கு போதைப் பொருள்கள் கிடைக்காமல் போவது, பல்வேறு நோய்கள், வலிகளின் காரணம், வயதானவர்கள், மாறுபட்ட சுற்றுப்புறச் சூழல் உள்ளிட்டவை தூக்கக் குறைபாடுகளுக்கான பிற காரணங்கள் ஆகும்.

தூக்க குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள்:

குறட்டை விடுதல், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஆகிய இரண்டு பிரச்சினைகளும் தூக்கக் குறைபாட்டினால் ஏற்படுகிறது. 

தூங்கும்போது ஏற்படும் இந்தப் பிரச்சினைகளால் ஒருவருக்குத் தேவையான ஒக்சிசன் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. 

தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சினையும் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்சினை நீண்ட நாள்களாக தொடர்ந்தால் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மனஅழுத்தத்தில் இருப்பவர்கள் அதிக அளவில் உணவை உட்கொள்வார்கள். இதனால் உடல் பருமனாகி தூக்கக் குறைபாட்டால் அவதிப்படுவார்கள்.

தூங்க வேண்டிய நேரம் 

1 வயது குழந்தை 12 முதல் 18 மணி நேரம்

5 வயதுக்குட்பட்ட குழந்தை 11 முதல் 13 மணி நேரம்

12 வயதுக்குட்பட்ட குழந்தை 10 முதல் 11 மணி நேரம்

18 வயதுக்குட்பட்டவர்கள் 8.30 முதல் 10 மணி நேரம்

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 முதல் 8 மணி நேரம்.