10,000 அடிகள் இல்லை.. ஆரோக்கிய வாழ்வுக்கு ஒரு நாளைக்கு எத்தனை அடிகள் நடக்க வேண்டும் தெரியுமா?

ஒரு நாளைக்கு 5,000 அடிகளுக்கு குறைவாக நடந்தாலே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்தலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

Not 10,000 steps, 4,000 steps are enough to reduce various health problems says new study

ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க ஒரு நாளைக்கு 10,000 அடிகள் குறைந்தபட்சம் தேவை என்று  பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், ஒரு நாளைக்கு 5,000 அடிகளுக்கு குறைவாக நடந்தாலே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்தலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை தான். சமீபத்திய ஆய்வில் இது உறுதியாகி உள்ளது. போலந்தில் உள்ள லோட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆகியவற்றின் குழு 226,000 க்கும் மேற்பட்ட மக்களிடம் ஒரு ஆய்வை நடத்தியது, அதில், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை குறைக்க சுமார் 4,000 அடிகள் போதுமானது என்று முடிவு செய்தனர். அதற்குப் பிறகு ஒவ்வொரு கூடுதல் 1,000 அடிகளும் 15 சதவீதம் முதல் 20,000 படிகள் வரை முன்கூட்டியே இறக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்பதும் தெரியவந்துள்ளது. 

ஆய்வின்படி, நமது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க 2,300 க்கும் மேற்பட்ட அடிகள் போதும். நடைபயிற்சி பலன்கள் அனைத்து பாலினங்களுக்கும் வயதுக்கும் பொருந்தும் என்றாலும், 60 வயதிற்குட்பட்டவர்களிடையே அதிக நன்மைகள் காணப்படுகின்றன என்பதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

லோட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர், Maciej Banach இதுகுறித்து பேசிய போது “  சிகிச்சைக்கான மேம்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அது மட்டும் பதில் இல்லை என்றும், இதய ஆபத்தைக் குறைப்பதற்கும், ஆயுளை நீடிப்பதற்கும் வாழ்க்கை முறை மாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் 3.2 மில்லியன் பேரின் மரணத்திற்கு உடல் உழைப்பின் பற்றாக்குறை காரணமாகும், இது உலகம் முழுவதும் இறப்புக்கான நான்காவது பொதுவான காரணியாக அமைகிறது. மேலும் அதிக நேரம் உட்காருவட்ஜி என்பது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் மற்றும் தசை வளர்ச்சி மற்றும் வலிமையை பாதிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது எல்லாவிதமான முதுகுப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம், அலுவலக வேலைகளில் இருப்பவர்களிடம் இதை அதிகம் காண்கிறோம், அவர்களின் முதுகு தொடர்ந்து அழுத்தமான நிலையில் வைக்கப்படுகிறது, இது பின்னர் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே முடிந்த அளவு அதிக நேரம் உட்காருவதை தவிர்க்கவும், நடடைபயிற்சி மற்றும் வழக்கமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அடுத்த அச்சுறுத்தலாக மாறும் புதிய வகை Eris கொரோனா.. WHO வெளியிட்ட முக்கிய தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios