அடுத்த அச்சுறுத்தலாக மாறும் புதிய வகை Eris கொரோனா.. WHO வெளியிட்ட முக்கிய தகவல்
இங்கிலாந்தில் புதிய வகை மாறுபாடான எரிஸ் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் உலக சுகாதார அமைப்பு அதனை ஆர்வத்தின் மாறுபாடு என்று வகைப்படுத்தி உள்ளது.
கொரொனா அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை என்பதற்கு உதாரணமாக தற்போது புதிய வகை கொரோனா மாறுபாடு வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவும் இந்த புதிய மாறுபாடு Omicron வகை கொரோனாவில் இருந்து உருமாற்றம் அடைந்துள்ளது. இந்த புதிய Covid மாறுபாடு EG.5 என்று எரிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், உலக சுகாதார அமைப்பு, அதனை"ஆர்வத்தின் மாறுபாடு" என வகைப்படுத்தியது. EG.5 உட்பட பல கொரோனா வைரஸ் வகைகள் கண்காணிக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த புதிய மாறுபாடு மற்ற வகைகளை விட பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெளிவுபடுத்தி உள்ளது. அந்த அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து பேசிய போது " பாதிப்பு மற்றும் இறப்புகளில் திடீர் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடிய மிகவும் ஆபத்தான மாறுபாட்டின் ஆபத்து இன்னும் உள்ளது. ஒட்டுமொத்தமாக, தற்போது புழக்கத்தில் உள்ள மற்ற ஓமிக்ரான் வம்சாவளி பரம்பரைகளுடன் ஒப்பிடும்போது EG.5 கூடுதல் பொது சுகாதார அபாயங்களைக் கொண்டுள்ளது என்று சான்றுகள் தெரிவிக்கவில்லை. EG.5 வகை கொரோனாவால் ஏற்படும் அபாயத்தைப் பற்றிய விரிவான மதிப்பீடு தேவை” என்று தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் உலக சுகாதார அமைப்பு, EG.5.1 மாறுபாட்டைக் கண்காணிக்கத் தொடங்கியது என்றும், தடுப்பூசிகள் மற்றும் முந்தைய தொற்றுநோய்களால் மக்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டாலும், நாடுகள் தங்கள் பாதுகாப்பைக் குறைக்கக் கூடாது என்று டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸ் கூறினார்.
முன்னதாக உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொற்றுக்கான நிலையான பரிந்துரைகளின் தொகுப்பையும் வெளியிட்டது. அதில் கொரோனா தொற்று தொடர்பான தரவுகளைத் தொடர்ந்து தெரிவிக்குமாறு நாடுகளை வலியுறுத்தியது.
இதனிடையே, EG.5 புதிய கோவிட் மாறுபாடு நாட்டில் வேகமாக பரவி வருவதாக இங்கிலாந்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதன்முதலில் கடந்த மாதம் இங்கிலாந்தில் இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 7 புதிய கோவிட் நோயாளிகளில் ஒருவருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கோவிட்-19 பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், தற்போது நாட்டில் உள்ள அனைத்து கோவிட் நோயாளிகளில் 14.6 சதவிகிதம் இருப்பதாக சமீபத்திய தரவு தெரிவிக்கிறது என்பதால், புதிய மாறுபாடு மிகவும் கடுமையானது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுகாதார மையத்தின் நோய்த்தடுப்பு தலைவர் இதுகுறித்து பேசிய போது "இந்த வார அறிக்கையில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். குறிப்பாக முதியவர்களிடையே மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்களில் சிறிய உயர்வைக் கண்டோம். ஒட்டுமொத்த சேர்க்கை நிலை இன்னும் மிகக் குறைவாகவே உள்ளன. தற்போது ICU சேர்க்கையில் இதேபோன்ற அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த விகிதங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் "வழக்கமான சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். முறையாக கைகளை, கழுவ வேண்டும். உங்களுக்கு சுவாச நோய்க்கான அறிகுறிகள் இருந்தால், முடிந்தவரை மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க பரிந்துரைக்கிறோம்," என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து சுகாதார அமைப்பு பொதுவான 'ஃப்ளூ மற்றும் கோவிட் தொற்றை கண்காணித்து வருகிறது., வளர்ந்து வரும் புதிய மாறுபாடுகளைக் கண்காணித்து வருகிறது. மேலும் கவலைக்குரியதாக வகைப்படுத்தப்பட்ட மாறுபாடுகளை கவனித்து வருகிறது. இங்கிலாந்து ஒமிக்ரானின் ஆர்க்டரஸ் XBB.1.16 மாறுபாடு, அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக நார்ச்சத்து சாப்பிடுவதும் ஆபத்தானது தான்.. இந்த பக்கவிளைவுகள் ஏற்படுமாம்..
- covid 19 eris varient
- covid 19 south africa variant
- covid 19 uk variant
- covid new variant
- covid new variant 2023
- covid new variant 2023 symptom
- covid new variant in india
- covid new variant in india 2023
- covid new variant in uk
- covid variant
- covid variant eris
- eris covid variant
- eris covid variant in uk
- eris variant
- eris variant covid
- new covid variant
- new covid variant eg.5.1
- new covid variant eris
- new covid variant in news
- variant