தூங்கிக் கொண்டே எடையை குறைக்கலாம்- தெரியுமா உங்களுக்கு..?
இப்போது நீங்கள் தூங்கிக்கொண்டே எடை இழப்புச் செய்யலாம். இந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தை தருவதாக இருக்கலாம். ஆனால் உண்மை தான். கூடுதல் எடையைக் குறைக்க தூக்கம் இப்போது எளிதான வழியாகும்.
உடல் எடையை குறைப்பதற்கு சக்கரை உணவுகளை தவிர்ப்பது, ஆரோக்கியமான உணவுமுறைக்கு மாறுவது போன்ற செயல்பாடுகளுடன் உடற்பயிற்சியும் கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் கூடுதல் எடையை குறைப்பதற்கு தூக்கம் எளிதான வழியாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம்மில் பெரும்பாலோர் மதிய உணவு மற்றும் இரவு உணவைத் தவிர, நாள் முழுவதும் அவ்வப்போது நொறுக்குத் தீனிகளை விரும்பி உண்கிறோம். இதனால் நாம் அதிக நேரம் விழித்திருக்கும் நிலை ஏற்படுகிறது. நொறுக்குத் தீனிகளை குறைத்துவிட்டாலே போதும். நமக்கான உறக்கம் சீராக இருக்கும். இதன்மூலம் உடல் எடை குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
நொறுக்குத் தீனியை நிறுத்துங்கள்
பணி காரணமாக அல்லது பொழுதுப்போக்கு காரணமாக, அதிகநேரம் விழித்திருப்பது உங்களுடைய ஒட்டுமொத்த செயல்பாட்டையும் சீர்குலைத்துவிடும். இதனால் கிரெலின் என்கிற திரவம் உடலில் அதிகப்படியாக சுரப்பதற்கு வழிவகுக்கிறது. அதன்காரணமாக பசி அதிகரித்து, நொறுக்குத் தீனியை சாப்பிட்ட காரணமாக அமைந்துவிடுகிறது. இதுதொடர்பாக பென்சில்வேனியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காலை 4 மணி முதல் 8 மணி வரை தூங்குபவர்கள் இரவு 11 மணி முதல் காலை 8 மணி வரை தூங்குபவர்களை விட 550 கலோரிகளை அதிகமாக உட்கொள்வது தெரியவந்துள்ளது.
தூக்கத்திலே கலோரிகளை எரிக்கலாம்
நாம் வேலை செய்யாத போதும் நமது உடல்கள் ஆற்றலைச் செலவழித்து கலோரிகளை எரிக்கின்றன. தூக்கத்தின் போது, ஒரு நபர் ஒரு மணி நேரத்திற்கு 65 கலோரிகளை எரிக்கிறார். அதாவது 8 மணி நேர தூக்கத்தில் 500 கலோரிகளுக்கு மேல் எரிக்க முடியும். அந்த நேரத்தை நீங்கள் டிவி பார்ப்பதில் செலவிட்டால், அதே அளவு கலோரிகள் எரியும். ஆனால் உடல் சோர்வாக இருக்கும் மற்றும் உடலில் குறைந்த ஆற்றலே காணப்படும்.
மலச்சிக்கல் பிரச்னைக்கு எளிய தீர்வு வழங்கும் நெய்..!!
ஷாப் செய்யுங்கள்; நன்றாக சாப்பிடுங்கள்
உடல் பருமன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஷாப்பிங் சென்றுவிட்டு தூங்குபவர்கள், அதிக நேரம் தூங்கியவர்களை விட 1300 மதிப்புள்ள கூடுதல் கலோரிகளை எரிப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல நன்றாக ஓய்வெடுத்துவிட்டு சாப்பிடுபவர்கள், நன்றாக சாப்பிடுபவர்களை விடவும் 35 கலோரிகள் அளவு குறைவாக சாப்பிடுவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த மன அழுத்தம் மற்றும் அதிக கவனம்
ஒரு நல்ல மற்றும் நீண்ட தூக்கம் மூலம் உடல் பல்வேறு வகையில் ஒழுங்குபடுகிறது. இதன்மூலம் உடலில் பலவீனம் ஏற்படுவது குறைந்து, மூளை ஒருமுகப்படுகிறது. கலோரிகள் அதிகமான உணவை சாப்பிடுவது குறித்து ஹார்வர்ட் மருத்துவப் பள்ளிஆய்வு மேற்கொண்டது. அதில் தூக்கமின்மை மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலைத் தூண்டுகிறது, இது நேரடியாக நமது கொழுப்புச் சேமிப்பை அதிகரிக்கிறது, இது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது.அதை தடுக்க குறைந்த கலோரிகள் கொண்ட உணவு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் மற்றும் நன்றாக படுத்து உறங்குங்கள்.